திருவெம்பாவை நோன்பு – திருவெம்பாவை பாடலும் விளக்கமும் 1

By Staff

Published:

eddf962048171d681d509bf63424ac7c

மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கோவிலில் அண்ணாமலையாரை தரிசிக்கும்போது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. சிவனுக்கு தொண்டு புரிய அருளவேண்டுமென்பதே இப்பாடலின் உள்நோக்கமாகும். சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவம். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே திருவெம்பாவை நோன்பாகும். 

525705d313dadf319f0d73beaa7dc1cf

திருவெம்பாவை நோன்பென்பது, மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு  ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும். இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து கோவிலுக்கு  சென்று சிவகாமியுடன் இருக்கும் நடராஜரை தரிசிப்பர்.  இந்நோன்புக் காலத்தில் ஒரு நேர உணவாக அவித்த உணவு மட்டுமே உண்பர்.  இதனைக் கண்ணுற்ற மாணிக்கவாசகர் இந்நிகழ்ச்சியை திருவெம்பாவை  பாடல்களாகப் பாடினார். இப்பாடல்களையே இன்றும் திருவெம்பாவைக் காலங்களில் கோயில்களில் பாடுவது வழக்கம்.திருவெம்பாவைபூசைக்கு நைவேத்தியமா பிட்டு செய்வர். அதனாலேயே  இப்பூசைக்கு பிட்டுப்பூசை எனப்பெயர் வந்தது. 

எம்பாவாய்ன்ற சொற்றொடர் தொடர்ந்து வருவதால் இந்த தொகுப்பிற்கு திருவெம்பாவைன்னு பேர் வந்தது.  தாய்லாந்தில் திருப்பாவையும், திருவெம்பாவையும் மன்னரின் முடிசூட்டுதல்போது பாடப்படுது. இந்த மாதம் முழுக்க மாலைநேரத்தில் திருவெம்பாவை பாடல்கள் விளக்கத்துடன் வெளியாகும்

திருவெம்பாவை பாடலும் விளக்கமும் 1.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அரும் பெருஞ்சோதியை யுடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை என்ன வியப்பு!

Leave a Comment