16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர்.. நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு..!

சென்னை அருகே 16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாகிய வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் நாயக் என்பவர், 2018 ஆம் ஆண்டு சென்னை வந்தார்.…

court

சென்னை அருகே 16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாகிய வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் நாயக் என்பவர், 2018 ஆம் ஆண்டு சென்னை வந்தார். திருமணமான பின்னர், தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். அவருடன், அவரது 16 வயது மனைவியும், 16 வயது தங்கையும் இருந்ததாக தெரிய வருகிறது.

சென்னையில் தங்கி இருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், 16 வயது மாணவியின் தங்கையை ஆசை வார்த்தைகள் கூறி ராஜ்குமார் கர்ப்பம் ஆக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இது குறித்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், ராஜ்குமார் தான் கர்ப்பத்துக்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த தீர்ப்பின் படி, 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ராஜ்குமார் நாய்க்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து, ராஜ்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.