வருஷம் 54 லட்ச ரூபாய் சம்பளம்.. ஆனாலும் வேலையை ராஜினாமா செய்த வாலிபர்.. சுவாரஸ்ய பின்னணி..

Published:

இங்கே பள்ளிக் கூடத்தில் நாம் படிக்கும் சமயத்தில் +2 பாஸ் ஆகி விட்டால் வாழ்க்கை எளிதாகி விடும் என கூறுவார்கள். பின்னர் கல்லூரியில் சேரும் போது அந்த படிப்பை முடித்து விட்டால் வாழ்க்கை நன்றாக அமையும் என சொல்வார்கள். ஆனால், மீண்டும் வேலை ஒன்று கிடைத்து விட்டால் வாழ்க்கையில் பின்னர் கஷ்டங்களே வராது என கூறுவார்கள்.

இப்படி சரியான ஒரு புரிதலும், வழிகாட்ட ஆளும் இல்லாமல் அவதிப்படும் பலரும் கடைசியில் தான் என்னவாக வேண்டும் என்பதே தெரியாமல் குடும்ப சூழ்நிலைக்காகவோ அல்லது தான் படித்ததற்காக கிடைக்கும் வேலைக்காகவோ என்ன லட்சியம் என்பது தெரியாமலேயே ஓடிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு பக்கம், பிடித்த வேலையும் இல்லாமல் நினைத்த சம்பளமும் இல்லாமல் திண்டாடும் கூட்டம் தான் இங்கே அதிகமாக உள்ளது.

அப்படி ஒரு சூழலில், ஆண்டிற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர் தனது லட்சியத்திற்காக அந்த வேலையை உதறி விட்டு செய்து வரும் விஷயம் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

பரந்தாப் சவுத்ரி என்ற பெங்களூரு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ரியல் எஸ்டேட் துறையில் அசிஸ்டன்ட் Vice President ஆக இருந்து வந்துள்ளார். இவர் ஒரு ஆண்டுக்கு சுமார் 54 லட்சம் ரூபாய் வரையும் சம்பாதித்து வந்துள்ளார். அப்படி இருந்தும் தனது கனவை அடைவதற்காக இந்த வேலையை உதறிவிட்டு வேறொரு பாதைக்கும் திரும்பி உள்ளார் பரந்தாப்.

இது தொடர்பாக லிங்குடு இன் தளத்தில் பரந்தாப் சவுத்ரி பகிர்ந்த தகவலின் படி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் எழுதுவதில் ஆர்வம் கொண்டு இயங்கிய பரந்தாப், Linked in தளத்தில் தினமும் எழுதுவதை வேலையாக வைத்துள்ளார். ஆரம்பத்தில் கொஞ்சம் போராட்டங்களை சந்தித்த பரந்தாப், கடந்த 3 மாதங்களில் முன்பிருந்த வேலையில் சம்பாதித்த பணத்தில் இருந்து 10 சதவீதம் குறைவாக தான் சம்பாதித்துள்ளார்.

ஆனாலும் தனக்கு பிடித்த வேலையை செய்வது மனநிறைவாக இருப்பதாகவும் பரந்தாப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். டிஜிட்டல் கன்டென்ட் எழுத்தாளராக இருக்கும் பரந்தாப் சவுத்ரி, நிச்சயம் பலருக்கும் இன்ஸபிரேஷனாக இருந்து வருகிறார்.

நிறைய பேர் பணத்திற்காக ஓடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், இன்னொருவர் தனது லட்சியத்திற்காக பணம் முக்கியமில்லை என ஓடுவது பலரையும் வியப்பில் தான் ஆழ்த்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...