நள்ளிரவில் ரயிலில் தனியாக பயணம் செய்த இளம்பெண்.. திடீரென வந்த 2 காவல்துறை அதிகாரிகள்.. அதன்பி நடந்த ட்விஸ்ட்..!

இந்திய ரயில்வே போக்குவரத்து அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் சமீபத்தில் மும்பையிலிருந்து சூரத் செல்லும் இரவு நேர ரயிலில் தனியாக பயணம் செய்த புர்வி ஜெயின் என்ற பெண் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட…

train

இந்திய ரயில்வே போக்குவரத்து அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் சமீபத்தில் மும்பையிலிருந்து சூரத் செல்லும் இரவு நேர ரயிலில் தனியாக பயணம் செய்த புர்வி ஜெயின் என்ற பெண் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு பெண் காவல்துறை அதிகாரிகள் தனது பயணத்தை எப்படி பாதுகாப்பாக மாற்றினர் என்பதை அவர் விவரித்துள்ளார்.

இரவு 11 மணியளவில் புர்வி தனது இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தபோது, இரண்டு பெண் காவல்துறை அதிகாரிகள் அவரது பெட்டிக்குள் வந்து, “இருக்கை 38 புர்வி?” என்று கேட்டுள்ளனர். குழப்பத்துடன் “ஆம்” என்று அவர் பதிலளித்ததும், “அவர்கள் என்னிடம் ‘பயணம் வசதியாக இருக்கிற்தா? நீங்கள் பாதுகாப்புடன் இருக்கிறீர்களா? என்று கேட்டு, ஏதேனும் உதவி வேண்டுமா என்று விசாரித்தனர். பின்னர், எப்போதாவது பாதுகாப்பற்றதாக உணர்ந்தால் அழைக்க ஒரு உதவி எண்ணைக்கொடுத்து சென்றனர் என பதிவு செய்துள்ளார்.

அடிக்கடி பயணம் செய்யும் புர்விக்கு இதுபோன்ற அனுபவம் இதற்கு முன் கிடைத்ததில்லை. இது அவருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது. அவரது அருகில் அமர்ந்திருந்த ஒரு வயதான தம்பதியினர் கூட, தங்கள் பேத்தி சில சமயங்களில் தனியாக பயணிப்பதால், இந்த செயல் அவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்ததாக பாராட்டினர்.

இந்த அனுபவம், நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திக்க தூண்டியதாக புர்வி தனது பதிவில் தெரிவித்தார். அந்த ஒரு நிமிடத்தில் நான் இந்திய ரயில்வே மற்றும் ஒட்டுமொத்த நாடும் எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை பற்றி சிந்திக்க வைத்தது. வந்தே பாரத் ரயில்கள் முதல் தடையற்ற ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வரைபயணம் மேலும் மென்மையாகி வருகிறது,” என்று அவர் பதிவு செய்தார்.

இந்தியா வளர்ந்த நாடுகளை போல இன்னும் நிறைய செய்ய வேண்டியிருந்தாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் உண்மையான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை நிரூபிக்கின்றன என்றும் அவர் ஒப்புக்கொண்டார். “பெண் அதிகாரிகள் தனித்து பயணிக்கும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பளிப்பது காந்தி கண்ட பெண்களின் பாதுகாப்பு நனவாகிவிட்டதாக பலர் பாராட்டு தெரிவித்தனர்.