ரூ.7000 கோடி பிக்சட் டெபாசிட்.. உலகின் மிக பணக்கார கிராமம்.. இந்தியாவின் எந்த மாநிலத்தில்?

  உலகிலேயே பணக்கார கிராமம் அமெரிக்காவில், சீனாவில், ஜப்பானில், ஜெர்மனியில் இல்லை. அது இந்தியாவில் தான் இருக்கிறது. வெறும் 30,000 மக்கள் தொகை கொண்ட அந்த கிராமத்தில் மட்டும் ரூ.7000 கோடி பிக்சட் டெபாசிட்…

madhapar

 

உலகிலேயே பணக்கார கிராமம் அமெரிக்காவில், சீனாவில், ஜப்பானில், ஜெர்மனியில் இல்லை. அது இந்தியாவில் தான் இருக்கிறது. வெறும் 30,000 மக்கள் தொகை கொண்ட அந்த கிராமத்தில் மட்டும் ரூ.7000 கோடி பிக்சட் டெபாசிட் வைக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான தகவலாகும்.

இந்தியாவில் மொத்தம் 284 கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர். அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்ததாக, அதிக அளவில் கோடீஸ்வரர்களைக் கொண்ட மூன்றாவது நாடு இந்தியா என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் உலகிலேயே மிகவும் பணக்கார கிராமம் கொண்ட நாடு இந்தியா என்றால், அது குஜராத் மாநிலத்தின் மடபார் கிராமம் என்று கூறப்படுகிறது.

சுமார் 30,000 மக்கள் கொண்ட இந்த அழகிய சிறிய கிராமம் உலகளவில் பணக்கார கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் தங்கள் வங்கிகளில் ரூ.7000 கோடி மதிப்பிலான பிக்சட் டெபாசிட் வைத்திருக்கிறார்கள். போர் பந்தர் நகரிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் பெரும்பாலும் பட்டேல் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் கிராமத்தின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றுவதாக கூறப்படுகிறது. இது ஒரு முன்மாதிரி கிராமமாக விளங்குகிறது.

இங்கு நல்ல சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ சேவைகள் ஆகியவை சிறப்பாக உள்ளன. நகரங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இந்த கிராமத்தில் வசதிகள் இருக்கின்றன. வெறும் 30,000 மக்கள் கொண்ட இந்த கிராமத்தில் HDFC Bank, Union Bank, ICICI Bank, State Bank of India, Punjab National Bank மற்றும் Axis Bank ஆகிய முக்கிய வங்கிகளின் கிளைகள் அனைத்தும் உள்ளன. மொத்தம் 17 வங்கிகளில் ரூ.7000 கோடிக்கு மேல் பிக்சட் டெபாசிட் இந்த கிராம மக்கள் வைத்திருக்கின்றனர். இது வங்கிகளுக்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாக விளங்குகிறது.

கிராமத்தின் செல்வத்திற்கு முக்கிய காரணம் வெளிநாடுகளில் இருந்து வரும் பண பரிவர்த்தனை. இந்த கிராமத்தைச் சேர்ந்த 1,200 குடும்பங்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை கிராமத்தில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு அனுப்புவதால், இந்த கிராமத்தில் உள்ள வங்கிகளிலும் அஞ்சல் நிலையங்களிலும் பெரிய தொகை பிக்சட் டெபாசிடாக சேர்ந்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து மக்கள் அனுப்பும் பணம் தவிர, விவசாயம் இங்கு முக்கிய வருமானமாக உள்ளது. குறிப்பாக மாம்பழம், மக்காச்சோளம், கரும்பு போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. அவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வெளிநாட்டு இந்தியர்களின் ஆதரவும், மடபார் கிராம விவசாயிகளின் உழைப்பும் தான் இந்த கிராமத்தை உலகிலேயே மிகச் சிறந்த பணக்கார கிராமமாக உருவாக்கியுள்ளது. இந்த பெயரையும் புகழையும் தொடர்ந்து பல ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.