பொதுவாக நம் அனைவருமே யாராவது ஒரு விபத்தில் இருந்தோ அல்லது ஏதாவது ஒரு சம்பவத்திலிருந்து நூலிழையில் தவறும் போது ஜஸ்ட் மிஸ் என்ற வார்த்தையை குறிப்பிடுவோம். இதற்கு பல நிகழ்வுகளும் அதற்கு சிறந்த பொருத்தமாக இல்லாத விஷயமாக இருந்தாலும் சமீபத்தில் பெண் ஒருவர் தப்பித்துள்ள வீடியோவும் அதன் பின்னணியும் ஜஸ்ட் மிஸ் என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
பொதுவாக ஒருவர் வாகனத்தில் செல்லும் போது பார்த்து செல்ல வேண்டும் என்று அனைவரும் கூறுவார்கள். தற்போதுள்ள காலத்தில் எல்லாம் வாகனத்தில் செல்லுவதைவிட ரோட்டில் நடந்து சென்றால் கூட பார்த்து சொல்லும் அளவுக்கு தான் இருந்து வருகிறது. எந்த நேரத்தில் நமக்கு ஏதாவது ஆபத்து வரும் என்பதே மிகப் பெரிய ஒரு மர்மமாக இருக்கும் சூழலில், சமீபத்தில் ஒரு பெண்ணுக்கு அப்படி ஒரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது.
தற்போது எல்லாம் சமூக வலைதளத்தின் பயன்பாடு மிக மிக அதிகமாக இருப்பதால் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் கூட மிக எளிதாக இணையதளத்தில் வைரலாகி விடுகிறது. அதிலும் சிலர் செல்போனிலேயே ஏதாவது வினோதமான சம்பவங்களை படம் பிடிக்கும் நிலையில் இன்னொரு பக்கம் விபத்து தொடர்பாகவோ அல்லது வினோதமாகவோ சாலை ஓரம் அல்லது வீட்டிற்கு அருகே நடைபெறும் சம்பவங்கள் கூட சிசிடிவிக்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதனால் அது தொடர்பான வீடியோவை பார்க்கும் பலரும் உடனடியாக அவை பெரிய அளவில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களிலும் பகிரத் தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவின் படி சாலை ஓரத்தில் ஒரு வீட்டின் அருகே நின்று பெண் ஒருவர் ஏதோ சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அவர் இன்னொரு புறம் அந்த வீதியில் நடந்து செல்ல திடீரென்று மேலே எங்கிருந்தோ ஒரு பெரிய தண்ணீர் டேங்க் அப்படியே அவரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அவரை நிச்சயம் இது பெரிய அளவில் காயப்படுத்தி விடும் என்று எதிர்பார்த்த நிலையில் தான் அவரது உடலில் விழாமல் அவரது தலைக்கு மேல் துவாரம் வழியாக நுழைகிறது. இதனால் அந்த பெண்மணி எந்த காயமின்றி தப்பித்தாலும் ஒரு வினாடி தவறாக இருந்தால் கூட அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டு இருக்கலாம்.
உடனே பக்கத்தில் இருந்த ஒருவர் ஓடி வந்து மேலே யாரையோ கைகாட்டி டேங்க் கீழே விழுந்தது பற்றி கோபத்துடன் கேட்க அந்த பெண்ணும் முன்பு சாப்பிட்டு இருந்து கொண்டதை அப்படியே மீண்டும் தொடர்ந்து மென்று கொண்டிருக்கிறார். ஜஸ்ட் மி என்ற வார்த்தைக்கு இந்த வீடியோ தான் மிகப் பொருத்தமானது என பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Kuch bhi ho khana rukna nahi chahiye..! pic.twitter.com/4220xFA0sJ
— Pooja_1010 (@Dabbu_1010) October 13, 2024