இதவிட எனக்கு என்னங்க வேணும்.. கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்.. வார்த்தையின்றி திக்கி நின்ற மனைவி.. வீடியோ..

By Ajith V

Published:

நமக்கு நமது நண்பர்கள் வட்டாரத்தில் இருந்தும், அல்லது குடும்பத்தில் இருந்தும் ஒருவர் தரும் பரிசை விட கணவனோ, மனைவியோ கொடுக்கும் பரிசின் மதிப்பை வார்த்தைகளில் விவரித்து விட முடியாது. வாழ்நாள் முழுக்க ஒருவருடன் வாழ போகிறோம் என்றால் அது கணவர் அல்லது மனைவி தான். அப்படி இருக்கும்போது அவர்கள் கொடுக்கும் பரிசை நிச்சயம் எதனுடனும் ஒப்பிட்டு விட முடியாது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு கணவன் அவரது மனைவிக்காக கொடுத்த பரிசு பொருட்கள் இணையத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

கணவன் மனைவியாக இணைந்து வாழும் போது ஒருவருக்கொருவர் என்ன என்ன விஷயங்கள் பிடிக்கும் என்பதை நுட்பமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெறுமனே அப்படி தெரிந்து வைத்திருப்பதுடன் மட்டுமில்லாமல் தேவைப்படும் நேரத்திலும் வாங்கி கொடுப்பது இன்னொரு சிறந்த உணர்வையும் கொடுக்கும். அதுவும் நாமாக என்ன வேண்டும் என கேட்காமல் அவர் விரும்பும் பொருட்களை உணர்ந்து கொண்டு வாங்கிக் கொடுப்பது இன்னும் ஸ்பெஷலான தருணம்.

அப்படி ஒரு சம்பவம் தான் கடந்த தீபாவளி தினத்தில் அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக ப்ரீத்தம் குமார் சென் என்ற நபர் தனது தாய்க்காக தந்தை வாங்கி கொடுத்த பரிசு பொருட்கள் தொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த வீடியோவின் ஆரம்பத்தில் தனது தாய் மற்றும் தந்தையை அறிமுகம் செய்து வைக்கிறார். பின்னர் தந்தை வாங்கி கொடுத்த பரிசு பொருட்கள் என்ன என்பதையும் விவரிக்கிறார். அப்போது அவரது தாய்க்காக ஸ்கின் கேர் பொருள்கள், லிப்ஸ்டிக், கிளிப், பொட்டு, முல்தானி மட்டி என ஒரு பெண்ணின் அழகு சேர்க்க தேவைப்படும் அனைத்து பொருட்களையும் தீபாவளி பரிசாக மனைவிக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

தனது கணவர் கொடுத்த சர்ப்ரைஸை பார்த்து ப்ரீத்தம் குமார் சென்னின் தாயும் வெட்கத்தில் சிவந்து போவதுடன் மட்டும் இல்லாமல் அப்படியே பேச முடியாமல் உறைந்து போய் நிற்கிறார். “அப்பா இந்த பொருட்களை அம்மாவுக்காக பரிசாக வாங்கி கொடுத்தார். இதுதான் தூய அன்பு” என ப்ரீத்தம் குமார் சென் தனது வீடியோவின் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் அவரது தாயார், தந்தையிடம் அடுத்த முறை ஒரு மேக்கப் கிட் வாங்கி கொடுங்கள் என்று கூற அதற்கு அவர் நிச்சயமாக என்றும் கூறுகிறார்.

இது தொடர்பான வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் பெண்கள் விலை மதிப்புள்ள பொருட்களை வாங்கி கேட்க மாட்டார்கள் என்றும் இதுபோல சிறிய பொருட்களை வாங்கி கொடுப்பதே அவர்களுக்கு மனநிறைவு தரும் என்றும் இந்த தம்பதியை வாழ்த்தி குறிப்பிட்டு வருகின்றனர்.