கணவன் இறந்தால் தனக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற காரணத்தினால், கணவனை கொலை செய்துவிட்டு அரசு வேலையுடன் காதலனுடன் உல்லாசமாக இருக்க திட்டமிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தீபக் என்ற இளைஞர் ரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு ஷிவானி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், திடீரென தீபக் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால், தீபக் மரணம் தொடர்பாக அவரது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்ததால், இது குறித்து தீவிரமாக விசாரணை செய்யப்பட்டது. அப்போதுதான் தீபக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரை கொலை செய்தவர் அவரது மனைவி ஷிவானி என்பதும் தெரியவந்தது.
கணவனை கொன்றால் உறவினருக்கு வேலை என்ற அடிப்படையில், தனக்கு ரயில்வே வேலை கிடைக்கும் என்றும், அதன் பின் காதலனுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற நோக்கத்துடன் அவர் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது தீபத்தின் மனைவி ஷிவானி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக உள்ள அவரது காதலனை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
கணவன்-மனைவி உறவு என்பது புனிதமானது என்று கூறப்படும் நிலையில், அரசு வேலைக்காகவும், காதலனுடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், கட்டிய கணவனை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.