அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எச்1பி விசாக்களுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒருபுறம் ட்ரம்ப்பின் புதிய கொள்கைகள், மறுபுறம் இந்திய அரசியல் களத்தில் நடக்கும் பரபரப்பான நிகழ்வுகள் என இந்த சூழ்நிலை ஒரு முழுமையான அலசலுக்குரியதாக உள்ளது.
எச்1பி விசா என்பது வெளிநாட்டு திறமையாளர்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையினரை, அமெரிக்காவில் வேலைக்கு அமர்த்துவதற்காக அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு வழியாகும். பொதுவாக, இந்திய ஐடி ஊழியர்கள் இந்த விசாவை பயன்படுத்தி அமெரிக்காவுக்கு சென்று சில ஆண்டுகள் வேலை செய்கிறார்கள். பின்னர், அவர்கள் அமெரிக்காவின் குடியுரிமையை பெறுவதற்கான கிரீன் கார்டு நடைமுறையை தொடங்குகிறார்கள். இது ஒரு எளிமையான மற்றும் செலவு குறைந்த முறையாக இருந்தது.
இதுவரை ஒரு ஊழியருக்கு எச்1பி விசா எடுக்க சுமார் ரூ.8 லட்சம் மட்டுமே செலவானது. ஆனால், ட்ரம்ப்பின் புதிய வரிவிதிப்பு கொள்கையால், இந்த விசாவுக்கான கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த தொகையை ஐடி ஊழியர்கள் செலுத்த தேவையில்லை; அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களே செலுத்த வேண்டும். இதனால், அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது கடினமான முடிவாக மாறியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு அமெரிக்காவில் உள்நாட்டு ஆதரவும் உள்ளது. வெளிநாட்டு ஊழியர்கள் குறைவான சம்பளத்திற்கு அமெரிக்காவில் வேலை செய்வதால், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அமெரிக்கர்கள், புகார் கூறுகின்றனர். ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது அமெரிக்க பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் முயற்சி என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அதே சமயம், இந்த கொள்கை, அமெரிக்காவில் திறமைசாலிகள் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும், பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மற்ற நாடுகளுக்கு மாற்றக்கூடும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவில் கடினமாக உழைக்க கூடியவர்கள், சனி, ஞாயிறு கூட அவசர வேலை செய்ய வேண்டும் என்றால் வேலை செய்யக்கூடியவர்கள் யாருமே இல்லை. ஆனால் இந்தியா உள்பட வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், பணம் சம்பாதித்துவிட்டு, சில ஆண்டுகளுக்கு பின் தாய்நாடு திரும்பி நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற நோகத்துடன் இருப்பவர்கள் கூடுதல் வேலை செய்ய தயங்க மாட்டார்கள். மேலும் அமெரிக்காவில் ஹார்டுவேர் படித்தவர்கள் தான் அதிகம், சாப்ட்வேரில் அவர்களுக்கு சுத்தமான விருப்பம் பெரும்பாலும் இருக்காது. ஆனால் இந்தியர்கள் சாப்ட்வேரில் வல்லர்கள். எனவே இந்தியர்கள் வேலைக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கும் முன் அமெரிக்கர்களை இந்தியர்களுக்கு இணையாக டிரம்ப் அரசு தயார் செய்ய வேண்டும், அதன்பின் இந்த முடிவெடுத்தால் கூட பரவாயில்லை. கூடுதல் உழைப்பை கொடுக்க முன்வராத, இந்தியர்கள் அளவுக்கு திறமையில்லாதவர்களை வைத்து கொண்டு இப்படி ஒரு முடிவை டிரம்ப் எடுத்திருப்பது தற்கொலைக்கு சமம் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியா-அமெரிக்கா உறவுகளில் இந்த எச்1பி விசா விவகாரம் ஒரு புதிய சவாலாக உள்ளது. இதற்கு முன்னர், கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் அமெரிக்காவின் அழுத்தத்தை இந்தியா எதிர்கொண்டது. அப்போதும், ரஷ்யாவுடனான நட்பு உறவை இந்தியா கைவிடவில்லை. இப்போது எச்1பி விசா என்ற விஷயத்தை கையில் எடுத்து இந்தியாவை வழிக்கு கொண்டு வர டிரம்ப் முயற்சிக்கிறார். ஆனால் இந்தியாவில் மோடி ஆட்சி நடப்பதால் டிரம்ப் எண்ணம் பலிக்க போவதில்லை. இதற்கும் ஒரு மாற்று வழி கண்டுபிடிக்கப்படும். இத்தகைய அழுத்தங்களை பிரதமர் மோடி எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “இந்தியா ஒரு பலவீனமான பிரதமரை கொண்டுள்ளது” என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், உலகத் தலைவர்களான இத்தாலிய பிரதமர், ஆஸ்திரேலிய பிரதமர், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதை மேற்கோள் காட்டி, அவரது கூற்றை பலர் மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தை உள்நாட்டு அரசியலுக்கு பயன்படுத்தினால் நிச்சயம் ராகுல் காந்தி வழக்கம்போல் மொக்கை வாங்குவார் என்று தான் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
டிரம்புக்கே தண்ணி காட்டும் மோடி, ராகுல் காந்தியின் இந்த கூற்றையெல்லாம் லெப்ட் ஹேண்டில் டீல் செய்துவிடுவார் என்றே அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
