மும்பையின் பிஸியான சாலையில் வழிப்போக்கர்களை திடீரென நிறுத்திய ஒரு வாலிபர், “எறும்பு நடந்து சென்று கொண்டிருக்கிறது, அது செல்லும்வரை காத்திருக்கவும். நீங்கள் எறும்பை மிதித்துக் கொண்டு சென்றால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்காகக் குரல் கொடுக்கும் பல மனிதர்களை நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால், எறும்புக்கு கூட ஒரு சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு வாலிபர் மும்பை வீதிகளில் செய்த செயல்தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வழிப்போக்கர்களிடம் திடீரென அவர்களை நிறுத்தி, “எறும்பு சாலையை கடக்கிறது, அதுவரை வெயிட் பண்ணுங்கள். நீங்கள் எறும்பை மிதித்து கொண்டு சென்றால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்று கூறினார். அவரது பேச்சை கேட்டுப் பலர் குழப்பமடைந்தனர்; கீழே எறும்புகளை தேடினர். இருப்பினும், அவர் சொன்னதற்காக சில நொடிகள் காத்திருந்துவிட்டு, அதன் பின் சென்றனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எல்லோரும் அந்த நபரை ஒரு மாதிரியாகப் பார்த்தாலும், ஒரே ஒரு நபர் மட்டும், “எறும்புகளும் உயிரினத்தை சேர்ந்தவைதான். எறும்புகளின் உயிருக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். நான் காத்திருக்கிறேன்” என்று கூறி சில வினாடிகள் நின்று அதன் பின் சென்றார். அவருக்கு அந்த வாலிபர் நன்றி தெரிவித்தார்.
இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. குறிப்பாக, கடைசியாக இருந்த நபர் எறும்புக்கு கூட மதிப்பளித்ததை அனைவரும் போற்றிப் பாராட்டினர். இது ஒரு பிராங்க் வீடியோதான் என்றாலும், ஒரு சின்ன எறும்புக்கு கூட நாம் கெடுதல் செய்யக்கூடாது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DL4_LJZohA7/?utm_source=ig_web_button_share_sheet
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
