இன்று சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் வழக்கம் மக்கள் மத்தியில் மிக மிக அதிகமாக இருந்து வருவதால் நாளுக்கு நாள் நிறைய விஷயங்கள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருப்பதை நாம் கவனித்திருப்போம். அதுவும் வினோதமாக ஏதாவது ஒரு விஷயத்தை செய்து வீடியோவாக வெளியிட்டால் எளிதாக மக்கள் மத்தியில் சென்றடையலாம் என்ற ஒரு கருத்தும் பரவலாக இருந்து வருகிறது.
இதன் காரணமாக விதவிதமான சவால்களையும் சேலஞ்ச் என்ற பெயரில் ஹேஷ்டேக்காக குறிப்பிட்டு, அதனை வீடியோவாக வெளியிட்டு வைரலாவதும் ஒரு டிரெண்டாக உள்ளது. முன்பெல்லாம் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற பெயரில் ஐஸ் நீரில் குளிப்பது தொடர்பான வீடியோக்கள் பெரிய அளவில் வைரலாகி வந்தது. ஒருவர் அதுபோன்ற சேலஞ்சை செய்ய அதனைத் தொடர்ந்து உலகில் உள்ள பலரும் அப்படியே செய்து வீடியோவாக வெளியிட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து காஃபி சேலஞ்ச் உள்ளிட்ட பல சேலஞ்சுகள் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்த விஷயங்களாகும். இவை சில காலங்கள் மட்டும் தான் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி ஃபுட் சேலஞ்ச் (Food Challenge) என்ற பெயரில் வித்தியாசமான அல்லது வினோதமான உணவை உண்ணுவதும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது.
இன்று இருக்கும் மக்கள் விதவிதமாக உணவகங்களுக்கு சென்று உண்ண வேண்டுமென விரும்புவதால் புதுமையான அல்லது வினோதமாக இருக்கும் உணவு பொருட்கள் தொடர்பான வீடியோக்களையும் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பார்த்து வருகிறார்கள்.
அப்படி அவர்கள் உணவு ரீதியான வீடியோக்களை பார்க்கும் போது ஃபுட் சேலஞ்ச் என்ற பெயரில் நிறைய வித்தியாசமான வீடியோக்களும் அதில் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் தான் சமீபத்தில் பெண் ஒருவர் ஒரு தட்டு நிறைய சாப்பாட்டையும், குழம்பையும் சேர்த்து ஒரு நிமிடத்தில் சாப்பிட்ட சம்பவம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இதில் கொஞ்சம் சாதமும், சில்லி பன்னீரும் இருக்க ஸ்டார்ட் என சொன்னதும் அடுத்த கணமே வேகமாக சாப்பிடவும் தொடங்கி விடுகிறார் அந்த பெண். அதுவும் இரண்டு கை நிறைய சாப்பாட்டை எடுத்து அவர் வாயில் உள்ளே தள்ளிக் கொண்டே இருக்க வாய் முழுக்க சாப்பாட்டும் நிரம்பி இருக்கிறது.
ஆனாலும் கொஞ்சம் கூட சளைக்காமல் அவர் சாப்பிடும் வேகத்தை பார்த்து அருகில் இருப்பவர்கள் நிச்சயமாக பந்தயத்தில் தோற்று விட்டதையும் உணர்ந்து கொண்டு அதிர்ச்சியில் சில கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில் இதை பார்க்கும் உணவுப் பிரியர்கள் பலரும் எனக்கே டஃப் கொடுப்பார் என்று வேடிக்கையான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் இத்தனை வேகமாக உண்பதற்கு எத்தனை நாட்கள் அவர் பசியுடன் இருந்து வருகிறார் என்றும் ஜாலியாக தெரிவித்து வருகின்றனர்.