கால் கிலோ காணாம போச்சு.. மது அருந்தி விட்டு போலீசாரிடம் ஆசாமி கொடுத்த புகார்.. சத்தமா சிரிச்சுட்டாங்க ..

By Ajith V

Published:

இந்த காலத்தில் எல்லாம் இயல்பாக நடக்கும் விஷயங்களில் இருந்து மாறுபட்டு ஏதாவது நடந்து விட்டாலே அது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலாகவும் செய்யும். அந்த வகையில் சமீபத்தில் மது அருந்திவிட்டு ஒரு நபர் செய்த அலப்பறை தொடர்பான வீடியோ தான் பலரது மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது. என்ன தான் நமக்கு சொந்தமான பொருட்களையோ பாதுகாப்பாக வைத்திருந்தாலும் திருட்டு போவது என்பது இயல்பாக நடந்து வருகிறது.

கண் அசந்து போகும் நேரத்தில் நமது பொருட்களை யாராவது திருடிவிடும் சூழலில் இன்று சிசிடிவி கேமரா இருந்தும் கூட அந்த விழிப்புணர்வு இல்லாமல் பல இடங்களில் கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. நாம் வெளியே சென்றாலும் வீட்டில் இருந்தாலும் மிகப் பாதுகாப்பாக இருக்கும் வேண்டும் என்பதுதான் முக்கியமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

அப்படி ஒரு சூழலில் தான் ஒரு நபர் வீட்டிற்குள் இருந்ததுடன் மட்டுமில்லாமல் ஒரு பொருள் காணாமல் போனதாக போலீசாரிடம் புகாரளிக்க அவர்கள் வந்த பின் நடந்த சம்பவத்தின் பின்னணி அதிகம் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் கொத்வாளி என்னும் நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது மன்னா புரவா என்ற கிராமம். அந்தப் பகுதியைச் சேர்ந்த விஜய் வர்மா சமீபத்தில் போலீஸ் ஹெல்ப் லைன் நம்பருக்கு அழைத்து தனது வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக விஜய் வர்மாவின் வீட்டிற்கும் போலீசார்கள் வர அவர் மது போதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. அவரிடம் என்ன பொருள் காணாமல் போனது என கேட்க அதற்கு தன் வீட்டில் இருந்த கால் கிலோ உருளைக்கிழங்கு காணாமல் போனதாக கூறியுள்ளார் விஜய் வர்மா. அதிகமாக வேலை செய்ததன் காரணமாக மது அருந்துவிட்டு உணவருந்த நினைத்ததாகவும் அப்போது தான் சமையல் செய்ய வைத்திருந்த உருளைக்கிழங்கை காணவில்லை என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரிடம் நீங்கள் யாரை சந்தேகிக்கிறீர்கள் என போலீசார் கேட்க, அப்படி யாரும் இல்லை என்றும் கண்டுபிடிப்பது உங்களின் கடமை என்றும் விஜய் வர்மா கூறி உள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ‘இப்போது நான் மது அருந்தி இருப்பது பிரச்சினை கிடையாது. நான் இந்த நாள் முழுவதும் வேலை செய்ததால் மது அருந்தி உள்ளேன். ஆனால் இப்போது எனது உருளைக்கிழங்கு காணாமல் போனது தான் பிரச்சனை. அதை கண்டுபிடித்து கொடுங்கள்’ என பிடிவாதமாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவை போலீசார் பதிவு செய்து வெளியிட தற்போது இணையவாசிகள் மத்தியிலும் அதிகம் பேசும் பொருளாக மாறி உள்ளது. பலரும் மிக வேடிக்கையாக கால் கிலோ உருளைக்கிழங்குக்கு தங்கத்தின் மதிப்பு இருக்கிறதா என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.