திருமணத்திற்கு நடுவே.. மினி டிம்போவை சேசிங் செய்த மாப்பிள்ளை.. பரபரக்க வைத்த காரணம்.. வீடியோ.

பொதுவாக திருமண நிகழ்வைச் சுற்றி என்ன நடந்தாலும் அதில் சாதாரணமான விஷயங்களில் இருந்து மாறுபட்டிருக்கும் போது நிச்சயமாக சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை பெறும். வித்தியாசமான போட்டோ சூட், வினோதமான திருமண அழைப்பிதழ் என…

Groom chase Mini Truck

பொதுவாக திருமண நிகழ்வைச் சுற்றி என்ன நடந்தாலும் அதில் சாதாரணமான விஷயங்களில் இருந்து மாறுபட்டிருக்கும் போது நிச்சயமாக சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை பெறும். வித்தியாசமான போட்டோ சூட், வினோதமான திருமண அழைப்பிதழ் என அனைத்திலும் ஏதாவது ஒரு புதுமையை புகுத்த நினைக்கும் மக்களும் இங்கே ஏராளமாக உள்ளனர்.

இதன் மூலம் தாங்கள் வாழ்வில் உன்னதமாக தொடங்கும் திருமண நிகழ்வு பலராலும் கவனிக்கப்படும் என்ற ஒரு ஆர்வமும் அவர்களை தொற்றிக் கொண்டுள்ளது. எதிர்பார்த்து நடைபெறும் சம்பவங்கள் இப்படி இருக்க எதிர்பாராமல் கூட திருமண நிகழ்வின்போது பல பரபரப்பான சம்பவங்களும் நிறைய அரங்கேறி உள்ளது. இந்தியாவிலேயே பல இடங்களில் திருமண நாளின் போது மாப்பிள்ளை செய்யும் மோசமான சம்பவங்களால் பல பெண்கள் திருமணத்தை நிறுத்தி உள்ளதை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்.

திருமணத்திற்கு நடுவே பரபரப்பு..

அப்படி ஒரு சூழலில் இதனை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு திருமண நாளில் அந்த நிகழ்ச்சியை விட்டுவிட்டு மாப்பிள்ளை ஒருவர் செய்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வைரலான வீடியோவில் மாப்பிள்ளை உடை அணிந்திருக்கும் ஒருவர் ஒரு மினி டெம்போவின் பின்னால் ஏறி அதற்குள் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதற்கான காரணம் என்ன என்பது தான் தற்போது அனைவரையும் ஒரு நிமிடம் அசந்து பார்க்க வைத்துள்ளது.

ஒரு திருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை குதிரை வண்டியில் கழுத்தில் பண மாலையை போட்டுக்கொண்டு சாலை ஓரம் உற்றார், உறவினர்கள் சூழ ஊர்வலம் வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அவ்வழியே வந்த மினி டிம்போ ஓட்டுநர் ஒருவர் அவர் கழுத்தில் இருந்த பண மாலையை அப்படியே பறித்துக் கொண்டு வேகமாக தனது வண்டியில் பறந்துள்ளார்.

ஆக்ஷன் காட்சியில் மாப்பிள்ளை..

இதனை அங்கிருந்த யாருமே சற்றும் எதிர்பாராத நிலையில் உடனடியாக ஒரு பைக்கில் அந்த மினி டெம்போவை துரத்தி பிடிப்பதற்கான முயற்சிகளில் மாப்பிள்ளை ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பைக்கை அங்கே போட்டுவிட்டு ஓடிக்கொண்டிருந்த மினி டிம்போவை சினிமாவில் வரும் ஆக்சன் காட்சியை போல எட்டிப் பிடித்த மாப்பிள்ளை அப்படியே மெல்ல மெல்ல அதற்குள்ளும் நுழைந்துள்ளார்.

தொடர்ந்து அந்த மினி டெம்போ நிறுத்தப்பட்டதும் அதிலிருந்து வெளியே இறங்கிய டிரைவரை தாக்கியுள்ளார் மாப்பிள்ளை. இதன் பின்னர் வலியால் துடித்த அவர், தான் எந்த நோக்கத்துடனும் பண மாலையை திருடவில்லை என்றும் எதேச்சையாக நடந்து விட்டது என்றும் விளக்கம் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர் என்ன ஆனது, அவர் மீது புகார் அளிக்கப்பட்டதா என்பது பற்றிய விவரம் சரிவர தெரியாத நிலையில் திருமண நாளிலேயே ஆக்சன் காட்சியில் இறங்கி சாகசம் செய்த மாப்பிள்ளையை பலரும் வியந்து பார்த்து வருகின்றனர்.