இந்தியவின் மிக உயர்ந்த பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் காலி பணியிடங்களை நிரப்பும் தேர்வு தான் UPSC எனப்படும் இந்திய குடிமை பணிகள் தேர்வு. மத்திய பணியாளர் தேர்வு வாரியம் இந்த இந்திய குடிமை பணிகள் தேர்வை நடத்துகிறது.
இந்த பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகள் இந்தியாவிலேயே மிகக் கடினமான தேர்வாக கருதப்படுகிறது.
தற்போது முதல்நிலை தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான முதன்மை தேர்விற்கான விண்ணப்பங்களை UPSC வெளியிட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி வருகிற ஜூலை 12 ஆம் தேதி ஆகும். விண்ணப்பங்களை பெறுவதற்கு UPSC இணையத்தை பார்வையிட வேண்டும்.
UPSC இன் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, குறிப்பிட்ட தேதியை கடந்து சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள படமாட்டாது என்று அறிவித்துள்ளது. இந்த விண்ணப்ப படிவத்திற்கான கட்டணம் ரூ. 200 ஆகும். SC/ST, மாற்று திறனாளிகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. இப்போது இந்த தேர்விற்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இனிக் காண்போம்.
upsc.gov.in இணையத்தை பார்வையிடவும். UPSC CSE 2024 DAF 1 ஐ க்ளிக் செய்யவும். தேர்வின் பெயரை க்ளிக் செய்து ரிஜிஸ்டர் செய்துக் கொள்ளவும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்ப கட்டணத்தை கட்டி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
UPSC முதன்மைத் தேர்வு, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களின் அடிப்படையில் ஒன்பது கட்டுரை-பாணி தாள்களைக் கொண்ட எழுத்துத் தேர்வின் வடிவத்தில் நடத்தப்படுகிறது. இதில் இரண்டு தாள்கள் தகுதியானவை. முதன்மைத் தேர்வின் எழுத்துப் பிரிவில் மொத்தம் 1750 மதிப்பெண்கள் கொண்டவை ஆகும். எழுத்துத் தேர்வில் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.