Teenage பயணிக்காக ஒரு தனி சேவை; பெற்றோருக்கு நிம்மதி அளிக்கும் Uber ஐடியா..!

Teenage பயணிகள் தனியாக பயணம் செய்யும்போது அவர்களது பாதுகாப்பான பயண தேர்வுகள் குறித்து பெற்றோரின் கவலை அதிகரிக்கையில், Uber India நிறுவனம் ‘Uber for Teens’ என்ற சிறப்புப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 13 முதல்…

uber

Teenage பயணிகள் தனியாக பயணம் செய்யும்போது அவர்களது பாதுகாப்பான பயண தேர்வுகள் குறித்து பெற்றோரின் கவலை அதிகரிக்கையில், Uber India நிறுவனம் ‘Uber for Teens’ என்ற சிறப்புப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

13 முதல் 17 வயதுக்குள் உள்ள பயணிகள் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை, பெங்களூருவில் வெற்றிகரமாக செயல்பட்ட நிலையில், மும்பை, புனே, டெல்லி , சென்னை, மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட 37 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Teenage இளைஞர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயண வழிமுறைகள் மிக அவசியம். இது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் போது, அவர்கள் உலகத்தைக் கண்டறியவும், பொறுப்புடன் வளரவும் தேவையான சுதந்திரத்தையும் வழங்குகிறது.

‘Uber for Teens’ சேவையின் மூலம், 13 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் தாங்களாகவே பயணங்களை முன்பதிவு செய்யலாம். இதனால், அவர்களுக்கு பயண சுதந்திரம் கிடைக்கும், அதே நேரத்தில் பெற்றோர்கள் அவர்களின் பயணத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியும்.

இந்த சேவையில் Uber பல முன்னெச்சரிக்கையான பாதுகாப்பு அம்சங்களை வழங்கியுள்ளது.

1. பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், குழந்தையின் பயணத்தை தொடங்கும் நேரத்திலிருந்து இலக்கு சென்றடையும் வரை கண்காணிக்கலாம்.

2. பெற்றோர்கள், தங்களது குழந்தையின் Uber கணக்கை நிர்வகிக்கலாம். குழந்தை வெளியில் இருக்கும் போதும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எந்தப் பயணத்தில் இருக்கிறார்கள் என்பதற்கான தகவல்களை உடனுக்குடன் பெறலாம்.

3. குடும்பத்துடன் இணைக்கப்பட்ட (family-linked) கணக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பான கட்டண விருப்பங்கள் வசதியும் உண்டு.

4. இந்த சேவையில் மிகவும் அனுபவம் உள்ள, பின்னணி சரிபார்க்கப்பட்ட ஓட்டுநர்கள் மட்டும் நியமிக்கப்படுவர்.

5. பயணியை சரியான ஓட்டுநர் மட்டுமே அழைத்துச் செல்லுவதை உறுதி செய்யும் பாதுகாப்பு முறை.

6. ஓட்டுநர் பயணிக்க வேண்டிய இலக்கை மாற்ற முடியாத பாதுகாப்பு அம்சம் உண்டு

7. ஆடியோ பதிவு என்ற பாதுகாப்பு அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு ஆபத்து என்றால் குரல் மூலம் தகவல் கொடுக்கலாம். உடனடி உதவி என்ற ஒரு பொத்தான் உள்ளது.

Uber for Teens எப்படி முன்பதிவு செய்யலாம்?

பெற்றோர்கள் தங்களது Uber கணக்கில் இருந்து தங்கள் குழந்தையை அழைக்க வேண்டும். Teenage இளைஞர்கள் தனக்கென ஒரு கணக்கை உருவாக்கி, தங்களது பெற்றோரை அவசர தொடர்பு நபராக சேர்க்கலாம். கணக்கு அமைப்பு முடிந்த பிறகு, குழந்தை தன்னாகவே பயணங்களை முன்பதிவு செய்யலாம். பெற்றோர்கள் நேரடி பயண மேம்படுத்தல்களை பெறுவர், இதில் பயண விவரங்கள், ஓட்டுநர் தகவல் மற்றும் நேரடி கண்காணிப்பு இடம்பெறும். பெற்றோர்கள் தங்களது குழந்தைக்காக பயணங்களை முன்பதிவு செய்யலாம். இது தானாகவே குழந்தையின் கணக்கில் தோன்றும்.

Uber for Teens இளைஞர்களுக்கு நம்பகமான மற்றும் வசதியான பயண முறையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்பாடு அளிக்க, குழந்தைகளுக்கு சுதந்திரம் வழங்கும் முறையில் சமநிலை பாதுகாக்கிறது.