மோடியை சமாளிக்கவே முடியவில்லை.. டிரம்ப் நண்பர் எடுத்த முயற்சி எல்லாமே தோல்வி தான்.. இந்தியா தான் இனி வல்லரசு.. இந்தியா இன்றி ஒரு அணுவும் அசையாது.. அமெரிக்காவுக்கு பணிந்தது பழைய இந்தியா.. இப்போது உள்ளது மோடியின் எழுச்சி இந்தியா..!

இந்தியாவின் வெளியுறவு மற்றும் பொருளாதார கொள்கைகள் சமீபகாலமாக சர்வதேச அரங்கில் தீவிர விவாதத்துக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக, உக்ரைன் போருக்கு பிறகு ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த அமெரிக்காவின் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.…

modi india

இந்தியாவின் வெளியுறவு மற்றும் பொருளாதார கொள்கைகள் சமீபகாலமாக சர்வதேச அரங்கில் தீவிர விவாதத்துக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக, உக்ரைன் போருக்கு பிறகு ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த அமெரிக்காவின் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, இந்தியாவின் மீது தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறார். சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் அரங்குகளில் அவரது குற்றச்சாட்டுகள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.

அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை கடுமையாக எதிர்த்து வருகிறார். அவரது வாதத்தின்படி, இந்தியா இந்த வர்த்தகத்தை லாபத்திற்காக மட்டுமே செய்கிறது என்றும், இதன் மூலம் ரஷ்யாவின் போர் தளவாடங்களுக்கு நிதி உதவி செய்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். சமீபத்தில் X சமூக வலைத்தளத்தில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து அவர் வெளியிட்ட ஒரு பதிவில், “இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் ரஷ்யாவின் போருக்கு உதவுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அவரது பதிவு உண்மைக்கு புறம்பானது என பல அமெரிக்க நெட்டிசன்களாலே சுட்டிக்காட்டப்பட்டது. இந்தியாவின் கொள்முதல் பெரும்பாலும் அதன் எரிசக்தி பாதுகாப்பிற்கானது என்றும், இது சர்வதேச தடைகளை மீறவில்லை என்றும் தெளிவாக குறிப்பிடுகிறார்கள். இவரது கூற்றை அமெரிக்கர்களே நம்பவில்லை.

நவரோ நெட்டிசன்களின் விமர்சனங்களை “முட்டாள்தனம்” என்று நிராகரித்தார். மேலும், எலான் மஸ்க், தனது தளத்தில் பிரச்சாரத்துக்கு இடம் அளிப்பதாக குற்றம் சாட்டினார். உக்ரைன் படையெடுப்புக்கு பின்னரே ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்க தொடங்கியது என்றும், இது முழுக்க முழுக்க லாப நோக்கத்துடன் மட்டுமே செய்யப்பட்டது என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

இத்தகைய தாக்குதல்கள் புதியவை அல்ல. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவின் இறக்குமதிகள் மீது 50% வரி விதித்தபோது இந்த விவகாரம் சூடுபிடித்தது. அமெரிக்காவின் முன்னணி இதழில் வெளியான ஒரு கட்டுரையில், அமெரிக்காவின் இந்த கடுமையான நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளை மோசமடைய செய்வதாக குறிப்பிட்டிருந்தது. முன்னதாக, நவரோ இந்தியாவை வரிகளின் மகாராஜா என்று விமர்சித்திருந்தார். இந்த வரி விதிப்புகள் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை காரணம் காட்டி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன.

இந்தியா தனது எரிசக்தித் தேவையில் 85% இறக்குமதி செய்கிறது. உக்ரைன் போருக்கு பிறகு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. அப்போது ரஷ்யா குறைந்த விலையில் எண்ணெயை வழங்க முன்வந்தது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பலமுறை கூறியதுபோல, இந்தியாவின் முக்கிய நோக்கம் அதன் 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதுதான். ஒரு நாடு தனது நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பது இயல்பானது. மற்ற நாடுகளும் தங்கள் வர்த்தக உறவுகளை தங்கள் சொந்த நலன்களின் அடிப்படையில்தான் தீர்மானிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியா தனது தேசிய நலனை முதன்மைப்படுத்தி முடிவெடுத்தது. சர்வதேச சட்டம் அல்லது தடைகள் எதையும் மீறாத வரை, ஒரு இறையாண்மை கொண்ட நாடு தனது வர்த்தக முடிவுகளை எடுப்பதில் யாருக்கும் கட்டுப்பட்டதல்ல. இந்தியாவும் எந்தவொரு போர் குற்றத்திலும் ஈடுபடவில்லை. எனவே, நவரோ போன்றோர் இந்தியாவின் முடிவுகளை விமர்சிப்பது, உள்நாட்டு அரசியல் லாபத்திற்காக என்பது தான் உண்மை

பீட்டர் நவரோ போன்றவர்களின் குற்றச்சாட்டுகள், இந்தியாவின் வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார முடிவுகளை குறைத்து மதிப்பிடுவதற்கான முயற்சிகள் என்றே கருதப்படுகின்றன. இந்தியா தனது முடிவுகளை மக்களின் நலன் மற்றும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்காகவே எடுக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் அல்லது வணிக நலன்களுக்காக இந்தியா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை. சர்வதேச தளத்தில், இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் நியாயமானது, இது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு அடிபணியாது