வரி விதிச்சும் பாத்தாச்சு, மிரட்டியும் பாத்தாச்சு.. இந்தியா அடங்க மாட்டேங்குதே.. டிரம்ப் இதுவரை சந்திக்காத வலிமையான எதிரி மோடி.. இந்தியாடா…

டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின் இடையேயான சந்திப்பு அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் நடைபெற்ற நிலையில், இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம், டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தபடி, உக்ரைன் போருக்கு ஒரு…

trump modi

டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின் இடையேயான சந்திப்பு அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் நடைபெற்ற நிலையில், இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம், டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தபடி, உக்ரைன் போருக்கு ஒரு அமைதியான தீர்வை காண்பதுதான்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தையில் இல்லாத நிலையில், இந்த சந்திப்பு உண்மையில் உக்ரைனில் அமைதியை கொண்டுவருமா என்பது மிகப்பெரிய கேள்வி.

இந்தியா மீது அமெரிக்கா வர்த்தக வரிகளை விதிப்பதற்கு பின்னணியில் சில நோக்கங்கள் உள்ளது. இந்தியாவின் ‘மென் சக்தி’ (soft power) மற்றும் ‘உலகளாவிய தெற்கின்’ (Global South) முக்கிய பிரதிநிதியாக இந்தியாவின் செல்வாக்கு வளர்வதை கட்டுப்படுத்தவே அமெரிக்கா இவ்வாறு செய்வதாக உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையுடன் இந்தியா இணங்கி செல்ல அழுத்தம் கொடுக்கவே இந்த வரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த வர்த்தக போரினால் இந்தியா மிரண்டுவிடவில்லை. டிரம்ப் தொடர்ந்து வரிவிதித்தால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்கா போன்ற புதிய சந்தைகளை இந்தியா ஆய்வு செய்யுமே தவிர அமெரிக்காவுக்கு என்றுமே அடிபணியாது. ஏனெனில் இது மோடியின் இந்தியா, பழைய இந்தியா அல்ல.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர், அமெரிக்க மண்ணிலிருந்து கொண்டே, போர்ப்பிரச்னை ஏற்பட்டால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும், இந்திய அணைகளையும் குறிவைப்பதாக அச்சுறுத்தியது ஒரு மிகப்பெரிய முட்டாள் தனம். இது ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல் என்பதையும் தாண்டி அமெரிக்க மண்ணில் இவ்வாறு அவர் பேசியதை அமெரிக்கா ஏன் அதிகாரப்பூர்வமாக கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

வெள்ளை மாளிகையின் இந்த மௌனம், அசிம் முனிரை இவ்வாறு பேச அமெரிக்கா ஊக்குவித்திருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது என்றும் அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மொத்தத்தில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கும் இந்தியா பயப்படவில்லை, அமெரிக்க மண்ணில் இருந்து அசீம் முநீரை டிரம்ப் பேச வைத்ததற்கும் இந்தியா பயப்படவில்லை. என்ன செய்தால் இந்தியா பணியும் என்று தெரியாமல் டிரம்ப் குழப்பி வருவது தான் மிச்சம்.