காளி கோவிலில் திருட வந்த திருடன்.. காளியே இறங்கி வந்து போலீசிடம் பிடித்து கொடுத்த அதிசயம்..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள காளி கோயிலில் திருட வந்த ஒரு திருடனுக்கு தூக்கத்தை வரவழைத்து, போலீசாரிடம் காளி தேவி இறங்கி வந்து பிடித்து கொடுத்ததாக அந்த பகுதி மக்கள் நம்புவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

kali

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள காளி கோயிலில் திருட வந்த ஒரு திருடனுக்கு தூக்கத்தை வரவழைத்து, போலீசாரிடம் காளி தேவி இறங்கி வந்து பிடித்து கொடுத்ததாக அந்த பகுதி மக்கள் நம்புவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள நோவாமுண்டி என்ற பகுதியில் உள்ள காளி கோவில் ஒன்றில், வீர் நாயக் என்பவர் திருட வந்தார். அதிக போதையில் இருந்த அவர், கோவிலின் சுவர் ஏறி குதித்து, காளி கோவிலில் உள்ள மதிப்புமிக்க பொருட்களைத் திருட முயன்றார். அலங்கார பொருட்கள், மணி, பூஜை தாலி, நகைகள், கிரீடம் உள்ளிட்டவற்றையெல்லாம் அவர் எடுத்து ஒரு பையில் அடைத்து கொண்டு தப்பிக்கத் தயாராக இருந்தார். அப்போது திடீரென அவருக்கு அடக்கவே முடியாத தூக்கம் வந்தது. ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு அதன் பிறகு தப்பிக்கலாம் என்று படுத்தவர், காலை வரை ஆழ்ந்து தூங்கிவிட்டார்.

காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி கதவை திறந்ததும், உள்ளே காளியின் மதிப்பு மிகுந்த பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடந்ததையும், ஒரு திருடன் தூங்கி கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கோவில் அறங்காவலர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரும் வந்தபோது, அப்போதும் கோவிலில் அந்த நபர் தூங்கிக் கொண்டிருந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து, போலீசார் அந்த திருடனை எழுப்பி கைது செய்தனர். விசாரணையின் போது, “காளி கோயிலுக்கு திருட தான் வந்தேன், ஆனால் திருடி முடித்தவுடன் எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அந்தக் கோவிலின் பூசாரி மற்றும் பக்தர்கள் கூறியபோது, “இது சாதாரணமான செயல் அல்ல. காளி தேவியே இறங்கி வந்து திருடனை போலீசாரிடம் பிடித்து கொடுத்திருக்கிறார். அந்த திருடனைத் தூங்க வைத்தது ஒரு தெய்வீக சக்தி” என்று கூறி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, வீடுகளில் திருட சென்ற பல திருடர்கள் சமையல் செய்து சாப்பிட்டு தூங்கியதால் போலீசாரிடம் பிடிபட்ட சம்பவங்கள் அதிகம் நடந்த நிலையில், தற்போது காளி கோயிலில் திருட வந்த ஒரு திருடனும் போலீசிடம் சிக்கியுள்ளார். இது காளி தேவியின் அருளால்தான் என்று அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.