எண்ணெய் வாங்குவதும் காரணமல்ல.. வேளாண் பொருட்களை வாங்காததும் காரணமல்ல்.. இந்தியா மீதான டிரம்பின் கோபத்திற்கு இதுஒன்று தான் காரணம்? ஒரு நாட்டின் அதிபர் இவ்வளவு சுயநலமாக இருப்பாரா? பாவம் அமெரிக்க மக்கள்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் மீது கடுமையான வர்த்தக வரிகளை விதிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று அவர் கூறியதை இந்தியா அங்கீகாரம்…

trump vs modi

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் மீது கடுமையான வர்த்தக வரிகளை விதிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று அவர் கூறியதை இந்தியா அங்கீகாரம் அளிக்காததுதான் என்று கூறப்படுகிறது.

கனடாவிற்கான முன்னாள் உயர் ஆணையர் ஒருவர் இதுகுறித்து கூறியபோது, “டிரம்ப் இந்தியா மீது கோபமாக இருப்பதற்கான முதல் காரணம், நாம் பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஒரு உறுப்பினராக இருப்பதுதான். பிரிக்ஸ் என்பது அமெரிக்காவிற்கு எதிரான ஒரு கூட்டணி என்றும், அது டாலருக்கு மாற்று கரன்சியை உருவாக்க முயல்கிறது என்றும் அவர் நினைக்கிறார். எனவே, இந்தியா பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்று அவர் கருதுகிறார்.

அதேபோல் கடந்த மே மாதம், “ஆபரேஷன் சிந்துர்” தாக்குதலுக்கு பிறகு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணித்து, அமைதி பேச்சுவார்த்தைக்கு தான் முக்கிய காரணமாக இருந்ததாக டிரம்ப் கூறி வருகிறார். ஆனால், எந்தவொரு வெளிநாட்டின் தலையீட்டையும் இந்தியா ஏற்கவில்லை. பாகிஸ்தானின் இராணுவ தலைமை அதிகாரியின் கோரிக்கைக்கு இணங்க இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நேரடி பேச்சுவார்த்தை மூலமாகவே இந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. இருப்பினும், “இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு தான் தான் காரணம் என்று டிரம்ப் 30 முறைக்கு மேல் கூறியுள்ளார். தனது பங்கிற்கு இந்தியா அங்கீகாரம் அளிக்காதது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அவருக்கு நோபல் பரிசுக்குக்கூட பரிந்துரை செய்து ஜால்ரா போட்டது. எனவே தான் டிரம்ப், பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து வருகிறாஅர்.

அமெரிக்காவின் விவசாயம், பால் பொருட்கள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட (GM) பயிர்கள் சந்தையில் அதிக அணுகலை வழங்குமாறு டிரம்ப் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இதற்கு இந்தியா பணியாததால், வரி விதிப்பு மூலம் தனது கோரிக்கைகளை ஏற்க வைக்க டிரம்ப் முயற்சிப்பதாக விகாஸ் ஸ்வரூப் விளக்கினார்.

நோபல் பரிசு ஆசையும், அரசியல் வியூகமும்

டிரம்ப் ஒரு சிறந்த சுயநலவாதி என்றும், தன்னை ஒரு “சமாதான புறா’ என்று நிலைநிறுத்த அவர் விரும்புவதாகவும் தெரிகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுத போரை தவிர்த்தது, தனக்கு நோபல் பரிசு பெற்று தரும் என்று டிரம்ப் நம்புகிறார். “பராக் ஒபாமா மட்டுமே அமெரிக்க அதிபர்களில் நோபல் பரிசு பெற்றவர். அவரைவிட ஒரு படி மேலே செல்ல வேண்டும் என்ற ஆசை டிரம்ப்பிற்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த நோபல் பரிசுக்காக தான் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கும் அவர் முயற்சித்து வருகிறார்.

பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் தற்போதைய நெருக்கத்திற்கு காரணம், பாகிஸ்தான், தெற்காசியாவின் “கிரிப்டோ கிங்” ஆக தன்னை நிலைநிறுத்த முயல்வதாகவும், இதன் மூலம் டிரம்ப் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனங்களுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்தி, அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியாக தங்களை முன்னிறுத்துவதாகவும் கூறப்படுகிறது.