60 லட்ச ரூபாய் ஓகே.. ஆனால் மழைக்காலத்தில் படகாக மாறுமா? டெஸ்லா கார் குறித்து நெட்டிசன்களின் மீம்கள் வைரல்..!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இன்று மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள மேக்கர் மாக்ஸிட்டி என்ற இடத்தில் முதல் ஷோரூமை திறந்துள்ளது. டெல்லியில் இரண்டாவது ஷோரூமைத் திறக்க திட்டமிட்டுள்ள டெஸ்லா, இந்தியா…

tesla car

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இன்று மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள மேக்கர் மாக்ஸிட்டி என்ற இடத்தில் முதல் ஷோரூமை திறந்துள்ளது. டெல்லியில் இரண்டாவது ஷோரூமைத் திறக்க திட்டமிட்டுள்ள டெஸ்லா, இந்தியா முழுவதும் பல வேலை வாய்ப்புகளையும் அறிவித்துள்ளது. மேலும், டெல்லி என்.சி.ஆர், மும்பை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் சூப்பர்சார்ஜர் நெட்வொர்க்குகளையும் டெஸ்லா அமைத்து வருகிறது.

இன்று திறக்கப்பட்ட மும்பை ஷோரூமில் ‘மாடல் Y’ காரின் லாங்-ரேஞ்ச் RWD மற்றும் AWD ஆகிய இரண்டு வகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் முதல் கார் டெலிவரி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின்சார வாகனங்கள் முழுமையாக இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் அதிக இறக்குமதி வரிகள் காரணமாக, அவற்றின் விலைகள் ₹59.9 லட்சம் முதல் ₹67.9 லட்சம் வரை இருக்கும். டெஸ்லாவின் வருகை அதன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும், X தளத்தில் பல இந்தியர்கள் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கவில்லை. அதிக விலைகள் மற்றும் இந்தியாவின் கணிக்க முடியாத சாலைகள், போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த கார் நம்மூருக்கு செட் ஆகாது என்பது போன்ற மீம்கள் பதிவாகி வருகின்றன.

ஒரு பயனர், “60 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கி வெள்ளம் வந்தால் அதை படகுபோல் தான் பயன்படுத்த வேண்டிய நிலை வரும் என இந்தியாவின் சாலை தரம் குறித்து கிண்டல் செய்துள்ளார்.

இந்திய சாலைகளில் டெஸ்லா கார்கள் செட் ஆகுமா? கார் மேக்சிமம் வேகத்திற்கு செல்ல முடியுமா? மேலும் இதன் விலை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக உள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் டெஸ்லா ₹20-25 லட்சம் விலையில் தான் பெரும்பாலானோர் வாங்குவார்கள். இந்த கார் ஒன்லி விவிஐபிகளுக்கு மட்டும் தான் என இன்னும் சிலர் கூறுகின்றனர்.

டெஸ்லாவின் வருகை ஒரு பிரீமியம் நகர்வாக கருதப்பட்டாலும், ஆன்லைன் எதிர்வினைகள், பிராண்டின் அதிக விலை மற்றும் நடைமுறைத்தன்மை குறித்து இந்தியர்கள் தங்கள் கருத்துக்களையும், மீம்களையும் வெளிப்படுத்த தயங்கவில்லை என்பதை காட்டுகிறது.