முன்பெல்லாம் கல்வி என்பது மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு இல்லாத சூழலில் தற்போது குடும்ப சூழ்நிலை எப்படி இருந்தாலும் அவர்களுக்கு அரசு பல சலுகை அறிவித்து பள்ளிக்கு செல்வதற்கான வழிகளையும் வகுத்து வருகிறது. ஒருவனின் வருங்காலத்தையும் அல்லது தலையெழுத்தையும் தீர்மானிக்க கூடிய சக்தி கல்விக்கு உண்டு என்பதால் பல மாணவர்களும் கூட தங்கள் எப்படியாவது ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தங்களின் கல்வி இலட்சியத்தையும் மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பல பள்ளிக்கூடங்கள் இந்தியாவில் இருக்கும் சூழலில், ஒரே ஒரு மாணவிக்காக இதே இந்தியாவில் ஒரு பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் தெலுங்கானா மாநிலம் கம்மம் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தி்ல் தான் அப்படி ஒரு பள்ளிக்கூடம் தற்போது இயங்கி வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த மாணவி தான் கீர்த்தனா.
ஒரே மாணவிக்காக ஸ்கூல்
இவர் இதே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் நிலையில் அந்த ஒட்டுமொத்த பள்ளிக்கூடத்திலேயே ஒரு மாணவியாக இவர் திகழ்ந்து வருகிறார். அது மட்டுமில்லாமல் கீர்த்தனா என்ற ஒரே மாணவிக்கு வகுப்பு எடுப்பதற்காக உமா பார்வதி என்ற ஆசிரியர் தினம் தோறும் பள்ளிக்கு வந்து செல்கிறார். அவர் இதை பற்றி பேசுகையில், 20 பேராக இருந்தாலும், 10 பேராக இருந்தாலும், ஒருவராக இருந்தாலும் வகுப்பு எடுப்பேன் என்பது ஒன்று தான் என்றும் குறிப்பிடுவதுடன் சுமை மட்டும் கொஞ்சம் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
மேலும் கீர்த்தனா என்ற மாணவிக்காக ஒரு பள்ளி இயங்கி வருவதுடன் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் ரூபாய் வரையிலும் அரசு சார்பில் செலவழிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆசிரியர் உமா பார்வதிக்கு சுமார் 12 லட்சம் ரூபாய் வரையில் ஒரு வருட சம்பளமும், அங்கே மற்ற பணியை செய்பவர்களுக்கு தலா முப்பதாயிரம் ஒரு வருடத்திற்கும் கொடுக்கப்பட்டு வருவதுடன் ஒரு ஆண்டிற்கு இந்த ஒரு அரசு பள்ளிக்காக ஏறக்குறைய 13 லட்சம் வரை செலவாகி வருகிறது.
விழிப்புணர்வு இல்ல
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக 70 மாணவர்கள் வரை இருந்த பள்ளியில் தற்போது ஒரே மாணவி படித்து வரும் நிலையில் தனியார் பள்ளி மோகத்தின் காரணமாக இது நடந்திருக்கலாம் என தெரிகிறது. அது மட்டுமில்லாமல் தனியாக ஒரு மாணவி பயின்று வருவது சமூக ரீதியாகவும், எமோஷனலாகவும் அவரது மேம்படுத்தல் விஷயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சைக்காலஜிஸ்ட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு பக்கம் ஒரு மாணவிக்காக ஒரு பள்ளி இயங்கி வருவதும் ஒரே ஆசிரியர் அனைத்து பாடங்களையும் எடுப்பதும் பேசு பொருளாக இருந்தாலும் இன்னொரு புறம் அரசு பள்ளிகள் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததும் இப்படி ஒரு தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.