தாஜ்மஹால் எனக்கு தான் சொந்தம்.. முகலாய பேரரசின் வாரிசு திடீர் அறிவிப்பு.. DNA சோதனைக்கு தயார்..!

  முகலாய பேரரசின் வாரிசு என்று கூறிக்கொள்ளும் ஒருவர், தாஜ்மஹால் தனக்குத்தான் சொந்தமானது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட போது, தங்கத்தால் ஆன செங்கலை வழங்கிய…

tajmahal

 

முகலாய பேரரசின் வாரிசு என்று கூறிக்கொள்ளும் ஒருவர், தாஜ்மஹால் தனக்குத்தான் சொந்தமானது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, இவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட போது, தங்கத்தால் ஆன செங்கலை வழங்கிய நிலையில், தற்போது அயோத்தி கோவிலுக்கும் தனக்கு உரிமை உண்டு என்று கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், முகலாய பேரரசு பல ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில், அதன் கடைசி அரசர் பகதூர் ஷா கைது செய்யப்பட்டதும், முகலாய பேரரசு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், பகதூர் ஷாவின் மருமகன் என்று 60 வயதான சுல்தானா பேகம் கூறி வருகிறார். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹௌரா பகுதியில் ஒரு சிறிய குடிசையில் தங்கி இருக்கும் இவர், பகதூர் ஷாவின் ஆறாவது தலைமுறை வாரிசு என்று அறிவித்துள்ளதோடு, அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீப் போன்றவர்கள் தன்னுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, தாஜ்மஹாலில் தனக்கு உரிமை உள்ளது என்றும், அயோத்தி ராமர் கோயில் இருக்கும் இடத்திற்கும் உரிமை உண்டு என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது டிஎன்ஏ பரிசோதனையை செய்து கொண்டு அதை நிரூபிக்கவும் தயார் என்று கூறியுள்ளார்.

அவருடைய கோரிக்கைகள் எந்த அளவுக்கு சட்டரீதியாக செல்லும் என்பது தெரியவில்லை என்றாலும், “முகலாய பேரரசு வாரிசுகள் இன்னும் இருக்கிறார்களா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.