கண் திறந்த நீதி தேவதை.. ஆங்கிலேயர் கால நடைமுறைக்கு முடிவு கட்டிய உச்ச நீதி மன்றம்

By John A

Published:

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் பல பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவில் ரயில்வே உள்ளிட்ட பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இன்றும் மெக்காலே கல்வி முறைதான் பின்பற்றப்படுகிறது. இப்படி ஆங்கிலேயர்கள் நம்மிடம் விட்டுச் சென்ற பல நடைமுறைகளில் ஒன்றுதான் நீதிமன்றங்களில் காணப்படும் நீதி தேவதை சிலை. கையில் தராசு, வாள், கண்களில் கருப்புத் துணியுடன் நீதிமன்றங்களில் நீதி தேவதை காட்சி தருகிறது.

இந்தியாவின் அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த சிலை இல்லாமல் இருக்காது. அந்தக் காலத்தில் பெண்களை அடிமைப்படுத்தி அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட தருணங்களில் பெண் சிலையையே நீதி தேவதையாகக் கருதி அதனை நீதிமன்றங்களில் வைத்தனர் பிரிட்டிஷ்காரர்கள். இந்த நீதிதேவதையின் சிலை கண்கள் கட்டப்பட்டதற்குக் காரணம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், கையில் உள்ள வாள் அநீதிகளைத் தண்டிக்கும் வகையிலும் வைக்கப்பட்டது.

11 வருடங்கள் இந்தியன் ரயில்வேயில் வேலை.. இன்று எலான் மஸ்க் நிறுவனத்தின் முக்கிய ஊழியர்..!

இந்நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட இந்த சிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் சில மாற்றங்களைச் செய்து மீண்டும் நிறுவியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கான நூலக அறையில் உள்ள ஆங்கிலேயேர் காலத்து பழைய நீதி தேவதை சிலை அகற்றப்பட்டு தற்போது புதிய நீதி தேவதை சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையில் கண்களில் கருப்புத்துணி கட்டப்பட்ட வில்லை. மேலும் கையில் வாளுக்குப் பதிலாக புத்தகமும், தலையில் கிரீடமும், சேலை உடுத்தி காணப்படுகிறது. இந்தச் சிலையினை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். மேலும் அவர் பொறுப்பேற்றதிலிருந்து சட்டத்துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.