திருப்பதி லட்டு விவகாரம்.. சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

By John A

Published:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாத லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் குற்றம் சாட்டினார்.

இதனை உறுதிப் படுத்தும் வகையில் உணவுத் தரக்கட்டுப்பாடு ஆய்வக பரிசோதனை அறிக்கையும் இதனை உறுதி செய்தது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் முதலமைச்சராக இருந்த போது இந்தச் சம்பவம் நடைபெற்றதால் அவர் மீது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார் சந்திரபாபு நாயுடு.

நிம்மதியான தவெக.. கொடிக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாதாம்.. விளக்கம் கொடுத்த தேர்தல் ஆணையம்

மேலும் துணை முதல்வரான பவன் கல்யாணும் இவ்விவகாரம் தொடர்பாக இந்துக்களின் உணர்வுகளை மதிக்கத் தவறியதாகவும், கலப்படக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காட்டமாக பதில் அளித்தார். மேலும் கலப்படம் நடந்ததாகக் கூறப்படும் அந்த மாதங்களில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி புரடக்ஸ் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் காவல் துறையில் புகார் தெரிவித்தது. இதனையடுத்து அந்நிறுவனம் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

நாடு முழுக்க பெரிய சர்ச்சையைக் கிளப்பிய இவ்விவகாரத்தில் தினந்தோறும் பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. மேலும் கோவில் பிரசாதங்களின் மீதான நம்பிக்கையும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

அதில், திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய்தான் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்? ஒப்புதல் அளிக்கப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததா? மேலும் கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நெய் பிரசாத லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதா? அரசியலமைப்பு பதவியில் உள்ள முதலமைச்சர் கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் லட்டு குறித்து மீம்ஸ்கள், டிரோல் வீடியோக்கள் வந்த நிலையில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் இந்து மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் மீம்ஸ்கள் போடுவது குறைந்துள்ளது.