தாயின் 2வது கணவரின் பாலியல் தொல்லை.. நடு ரோட்டில் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்..!

  மும்பையில் வசிக்கும் ஒரு இளம்பெண், தாயின் இரண்டாவது கணவரால் தொடர்ச்சியாக பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறி, கோபத்தில் அவரை நடு தெருவில் துரத்தி கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாலாசோபாரா…

knife

 

மும்பையில் வசிக்கும் ஒரு இளம்பெண், தாயின் இரண்டாவது கணவரால் தொடர்ச்சியாக பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறி, கோபத்தில் அவரை நடு தெருவில் துரத்தி கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாலாசோபாரா என்ற மும்பையின் முக்கிய பகுதியில், கடந்த திங்கட்கிழமை மதியம் 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. அந்த பெண், கத்தியுடன் ஒரு 56 வயது நபரை சாலையில் விரட்டி கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சில நிமிடங்களுக்குள், அவர் அந்த நபரை பிடித்து, கை, கால், முகம் உள்ளிட்ட பல இடங்களில் கத்தியால் தாக்கியதோடு, இறுதியில் அவரது ஆணுறுப்பையும் வெட்டி விட்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதே நேரத்தில், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குறித்த நபர் தன் தாயின் இரண்டாவது கணவர் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் தன்னை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வந்ததாகவும், அதை தாங்க முடியாமல் கோபத்தில் கத்தியால் தாக்கியதாகவும் அந்த இளம்பெண் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, காயம் அடைந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்த இளம்பெண்ணுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, அந்த பெண் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியதுண்டு என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நகரின் நடுவே, பரபரப்பான சாலையில் நடந்த இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.