என்னுடைய லீடர்ஷிப் ஸ்டைல் ராகுல் டிராவிட் மாதிரி, மிக கட்டுப்பாட்டுடனும், குழுவுடன் ஒருமித்து செயல்படுவது. ஆனால், ஸ்ரீதர் வேம்பு சேவாக் மாதிரி, அதிரடி ஆட்டம் ஆடுவார் என்று தெரிவித்துள்ளார்.
Zoho நிறுவனம், அதிக நிதி பெற்ற ஸ்டார்ட்அப்புகள் போன்று வேகமாக வளர்வதை விட, “மெதுவாக, ஆனால் உறுதியாக வளர்வதை” விரும்புகிறது என்பதை தான் ராகுல் டிராவிட் உடன் ஒப்பிட்டு டேவி தெரிவித்துள்ளார்.
“நாங்கள் மிக நீண்ட கால திட்டங்களை வைத்திருக்கிறோம். கீழிருந்து மேலே வரை தொழில்நுட்ப அடுக்குகளை உருவாக்கி, எங்கள் ஊழியர்களை பயிற்றுவிக்க விரும்புகிறோம்.
Zoho தற்போது இந்திய மொழிகளில் தனிப்பட்ட AI மாடல்களை உருவாக்கி வருகிறது. விரைவில் இதனை வெளியிடும் திட்டம் உள்ளது. நாங்கள் முழுவதுமாக புதிய AI மாடல்களை முயற்சிக்கின்றோம். 7 பில்லியன் அளவில் தொடங்கி, 32 பில்லியன், 70+ பில்லியன் அளவிற்குப் போகிறோம்,” என்று அவர் கூறினார்.
Zoho நிறுவனத்தின் புதிய CEO, சைலேஷ் குமார் டேவி நிறுவனம் மெதுவாக, ஆனால் நிலையாக செல்லும் திட்டத்தை வகுக்கிறார். Indic AI உருவாக்கம், முதலீடுகள் & ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. AI மூலம் 30% செயல்திறன் மேம்பாடு ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் புதிய லீடர்ஷிப் ஸ்டைல், இந்திய AI தொழில்நுட்பத்திற்கு மாபெரும் வளர்ச்சி தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.