ஒடஞ்சு போய்ட்டேன்.. ரொம்ப நாள் கனவு.. மகன் கொடுத்த சர்ப்ரைஸ்.. ஆச்சரியத்தில் உறைந்து போன தாய்.. வீடியோ..

By Ajith V

Published:

சிறு வயதில் இருந்தே தங்கள் பிள்ளைகள் ஆசைப்பட்டு கேட்கும் விஷயங்களை கடினமாக உழைத்தாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்று தான் பெற்றோர்கள் நினைப்பார்கள். தங்கள் குழந்தைகளின் கல்வி, கல்லூரி படிப்பு, வேலை உள்ளிட்ட விஷயங்கள் வரைக்கும் பார்த்து பார்த்து அவர்கள் பெற்றோர்கள் செய்து கொடுக்கும்போது எந்தவித எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இருப்பது இல்லை.

தங்கள் பிள்ளைகள் வருங்காலத்தில் குடும்பத்துடன் நன்றாக இருந்தால் போதும் என்ற ஒரே ஒரு எண்ணம் தான் அவர்களுக்கு இருந்து வருகிறது. தாய், தந்தை என இருவருமே எந்தவித சுயநலமும் இல்லாமல் தங்களின் பிள்ளைகளுக்காக அனைத்தையும் பார்த்து செய்து வருகின்றனர். அதே கனவு தங்கள் நல்ல வேலைக்கு சென்ற பின்னர் பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பிள்ளைகளுக்கும் இருந்து வருகிறது. ஒரு பக்கம் பெற்றோர்கள் மீது எந்த பாசமும் இல்லாமல், அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் சிலர் இருந்து வந்தாலும் இன்னொரு பக்கம் பெற்றோர்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளும் பிள்ளைகளும் இங்கே ஏராளமாக உள்ளனர்.

அந்த வகையில் சமீபத்தில் தனது தாய்க்காக இளைஞர் ஒருவர் கொடுத்த பரிசு தொடர்பான வீடியோ தான் இணையவாசிகள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. சமீபத்தில் தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதுமுள்ள மக்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டிருந்தது. சாலைகள் முழுக்க பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி, கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் குடும்பத்தினர் அனைவருடன் ஒரே இடத்தில் கலந்து கொண்டு மிக சிறப்பாகவும் இதனை கொண்டாடித்து தீர்த்திருந்தனர்.

அப்படி ஒரு சூழலில் இதே தீபாவளி நாளில் தனது தாய்க்கு ஒரு பரிசை வழங்க வேண்டும் என சோம்ராத் தத்தா என்ற இளைஞர் நினைத்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த வீடியோ ஒன்றில், அவரது தாய் சோஃபாவில் அமர்ந்திருக்க, அவரிடம் சர்ப்ரைஸ் பரிசை கொடுக்கிறார். அதில் ஐபோன் 15 இருக்க அதை பார்த்து அவரது தாயும் ஒரு நிமிடம் ஆடிப்போய் நிற்கிறார். அவர் பேச முடியாமல் ஆச்சரியத்தில் கூச்சல் போடுகிறார்.

இது பற்றி சோம்ராத் தத்தா தனது பதிவில், “நான் அப்படியே கண்ணீரில் மூழ்கி விட்டேன். எனது தாய் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு பழைய ரெட்மீ போனை பயன்படுத்தி வருகிறார். அது கடைசி காலகட்டத்தில் இருக்கும் சூழலில் எப்படியாவது ஒரு ஐபோன் 15-ஐ இந்த தீபவளிக்கு பரிசளிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இதற்காக பல நாட்கள் இறைவனை வேண்ட, அந்த நாள் இப்போது வந்துவிட்டது” என குறிப்பிட்டுள்ள.

இந்த வீடியோவை பார்த்த பலரும் மனம் உருகி போக அவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு கொடுத்த பரிசு பற்றி நினைவு கூர்ந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.