ஷர்மா மேலும் கூறியதாவது, தனது சகோதரிக்கும் மைத்துனருக்கும் 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அறிவுரையை தான் வழங்கினேன். இன்று அவர்கள் நிதி அளவில் பாதுகாப்பாகவும், மன அழுத்தம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
“என் சகோதரி மற்றும் மைத்துனர் ஒரு சிறிய நகரில் வசிக்கிறார்கள்.எங்கு, எப்படி பங்கு சந்தையில், மியூச்சுவல் ஃபண்ட்களிக் முதலீடு செய்வது?’ என கடந்த 35 ஆண்டுகளாக என்னிடம் அடிக்கடி கேட்பார்கள்
என் பதில் எப்போதும் ஒரே மாதிரிதான். பங்குச்சந்தையும் வேண்டாம், மியூச்சுவல் ஃபண்ட் வேண்டாம். இது உங்களை போன்றவர்களுக்கானது அல்ல. உங்கள் பணத்தில் 40% நல்ல நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட்களில், 30% தங்கத்தில், 30% நகரத்திலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள நிலத்தில் முதலீடு செய்யுங்கள் என்று கூறினேன். “இப்போது, அவர்கள் மன அழுத்தமின்றி, பண வசதியுடன் வாழ்கின்றனர்.
ரிசர்வ் வங்கி என்றால் என்ன? அதன் கவர்னர் யார்? அமெரிக்க பெடரல் வங்கி என்றால் என்ன? கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன? வர்த்தக போர்களால் என்ன விளைவுகள்? போன்ற எந்தப் பொருளாதார விவகாரங்களையும் அறியாமலேயே அவர்கள் வசதியாக உள்ளனர்’ என்று கூறியுள்ளார்.
ஒரு X பயனர் “பங்குச்சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் பெரும் செல்வம் ஈட்ட முடியாதா?” என்று கேட்டபோது, ’அதில் அதிர்ஷ்டம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது’ என்று ஷர்மா பதிலளித்தார். மேலும் பங்குச்சந்தையில் வெகு சிலரே உண்மையாக பணம் சம்பாதித்திருக்கிறார்கள். அவர்கள் அதிர்ஷ்டசாலிகள், அவ்வளவுதான்,” என அவர் கூறினார்.