கடல் வழி கேபிள்: இந்தியாவுடன் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் ஏர்டெல்..

  ஏர்டெல் நிறுவனம் கடலுக்கு அடியில் 45,000 கிலோமீட்டர் நெட்வொர்க் பாதையை ஏற்படுத்தி வருகிறது. 50 நாடுகள் மற்றும் ஐந்து கண்டங்களை உள்ளடக்கிய இந்த பாதை, இந்தியாவை ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு…

airtel

 

ஏர்டெல் நிறுவனம் கடலுக்கு அடியில் 45,000 கிலோமீட்டர் நெட்வொர்க் பாதையை ஏற்படுத்தி வருகிறது. 50 நாடுகள் மற்றும் ஐந்து கண்டங்களை உள்ளடக்கிய இந்த பாதை, இந்தியாவை ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏர்டெல் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது. அடுத்த கட்டமாக, கடலுக்கு அடியில் கேபிள் பாதிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் மிக நீளமான கடலுக்கு அடியில் உள்ள கேபிள் இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 45,000 கிமீ நீளத்தை கொண்ட இந்த கேபிள்கள், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களை இணைத்து, மத்திய கிழக்கு நாடுகளையும் இணைக்கின்றன.

Bayobab, Center3, China Mobile International, Meta, Orange, Telecom Egypt, Vodafone Group, மற்றும் WIOCC ஆகிய நிறுவனங்களின் உதவியுடன், இந்த கேபிள் பாதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த பணி முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. ஏர்டெல் உலகளாவிய நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இந்தியாவுடன் மற்ற அனைத்து நாடுகளையும் இணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் ஏர்டெல் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில், உலகளவில் அதிகளவு கடலுக்கு அடியில் உள்ள கேபிள் அமைப்பில் ஏர்டெல் முன்னணியில் இருக்கும் என்றும், “எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தரமான, நம்பகமான நெட்வொர்க் சேவைகளை வழங்குவதே எங்கள் நோக்கம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏர்டெல், 50 நாடுகள் மற்றும் ஐந்து கண்டங்களை உள்ளடக்கிய 4,00,000 கிமீ நெட்வொர்க் பாதையை கொண்டுள்ளது. இதன் உள்கட்டமைப்பில், கடலுக்கு அடியில் 34 கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.