என்னங்கடா இந்தியா இப்படியெல்லாம் யோசிக்குது.. அதிர்ச்சியில் டிரம்ப்.. இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது ரஷ்யா.. முதலில் மியூட்சுவல் பண்ட்.. பின்னர் பங்குச்சந்தை.. ரஷ்யாவின் முதலீடு ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் இல்லை.. 5 லட்சம் கோடி.. வேற லெவலில் செல்லவிருக்கும் இந்திய பங்குச்சந்தை..

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான வர்த்தக உறவில் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் அதிர்ச்சி அளிக்கும் நகர்வு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் குவிந்து கிடக்கும் இந்திய ரூபாயை அவர்கள் இனி நேரடியாக இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும்.…

nifty

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான வர்த்தக உறவில் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் அதிர்ச்சி அளிக்கும் நகர்வு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் குவிந்து கிடக்கும் இந்திய ரூபாயை அவர்கள் இனி நேரடியாக இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும். குறிப்பாக, நிஃப்டி 50 பங்குகளில் இந்த முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஒரு முறையை இரு நாடுகளும் உருவாக்கியுள்ளன.

டாலர் அல்லாத நாணயத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, அந்த பணத்தை ரஷ்யாவுக்கு பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மீண்டும் முதலீடாக மாற்றும் இந்த வியூகம் மிகவும் சுவாரஸ்யமானது. இது இரு நாடுகளுக்கும் கூடுதல் வருவாய் ஈட்டவும், ரஷ்யாவின் உபரி நிதியை சுழற்சிக்கு கொண்டு வரவும் உதவுகிறது.

தற்போது இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மொத்த வர்த்தகம் சுமார் 68 பில்லியன் டாலர் ஆகும். இதை 2030-க்குள் குறைந்தபட்சம் 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 68 பில்லியன் டாலர் வர்த்தகத்தில், இந்தியா ரஷ்யாவுக்கு சுமார் 4 முதல் 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்கிறது. மீதமுள்ள சுமார் 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை நாம் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்கிறோம். ரஷ்யாவின் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, இந்த இறக்குமதி பணத்தை டாலரிலோ அல்லது வேறு மேற்கத்திய நாணயத்திலோ செலுத்த முடியாது. எனவே, இந்த பெரிய தொகை ‘வோஸ்ட்ரோ கணக்குகள்’ மூலம் இந்திய ரூபாயாகவே இந்திய வங்கிகளில் தேங்கிக்கிடக்கிறது.

இப்படியாக குவிந்துள்ள கோடிக்கணக்கான ரூபாயை ரஷ்யா என்ன செய்வது? சீனா போல அவர்களுக்கு உணவு நெருக்கடியோ, அல்லது கனிம வளங்கள் பற்றாக்குறையோ இல்லை. அவர்களுக்கு தேவைப்படுவது நுகர்வோர் பொருட்கள், எந்திரவியல் மற்றும் மின்னணு பாகங்கள் போன்றவையாகும். ஆனால், மேற்கத்திய நாடுகளின் தடைகள் காரணமாக, இந்திய நிறுவனங்கள் பல இந்த முக்கியமான பொருட்களை ரஷ்யாவுக்கு விற்க தயங்குகின்றன. இதனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 முதல் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் இந்தியாவிலேயே முடங்கி கிடக்கிறது. இந்த சவாலைச் சமாளிக்கவே, ரஷ்யா இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் இந்த யோசனை உருவானது.

இதன் முன்னோட்டமாக, ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெரிய அரசு வங்கியான ஸ்வெர்பேங்க் இந்திய நிறுவனத்துடன் இணைந்து ‘ஃபர்ஸ்ட் இந்தியா’ என்ற பெயரில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை தொடங்க முன்வந்துள்ளது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம், ரஷ்யாவின் உபரி ரூபாயை இந்தியாவின் நிஃப்டி 50 பங்குகளில் முதலீடு செய்யவுள்ளது. இது ஆரம்பத்தில் மியூச்சுவல் ஃபண்டில் தொடங்கினாலும், பின்னர் நேரடி பங்கு முதலீடு வரை செல்ல வாய்ப்புள்ளது. சுமார் 5 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன் உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியப் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய வழியில்லாத நிலையில், இது இரு தரப்புக்கும் ஒரு Win Win வாய்ப்பாக அமைகிறது.

இந்த முதலீட்டு முறை ரஷ்யர்களுக்கு ஒரு சாதகமான திட்டமாகும். ஏனென்றால், மியூச்சுவல் ஃபண்ட் வழியாக அவர்கள் முதலீடு செய்யும்போது, இந்திய பங்குச்சந்தை வளர்ச்சியடையும்போது அவர்களுக்கும் லாபம் கிடைக்கும். மேலும், இந்த கருத்தானது ரஷ்யா தனித்து எடுத்த முடிவு அல்ல; இது ஜனாதிபதி மட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே விவாதிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். ரஷ்யாவின் இந்த முடிவை பார்த்து, மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளும் இந்திய பங்குச் சந்தையில் தங்கள் உபரி நிதியை முதலீடு செய்ய தூண்டப்படலாம். இது இந்திய பங்குச்சந்தைக்கு ஒரு மாபெரும் ஊக்கத்தை கொடுக்கும் என்பதுடன், பிரிக்ஸ் நாடுகளுக்குள்ளேயும் புதிய பொருளாதார ஒத்துழைப்புக்கு பாதை அமைக்கும்.

ஒட்டுமொத்தமாக, இது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது: டாலர் அல்லாத வர்த்தகத்தை நிறுத்த அவர்கள் செய்யும் முயற்சி பலனளிக்கவில்லை. ரஷ்யா போன்ற வளமிக்க நாடு, மேற்கத்திய தடைகளால் திணறினாலும், தங்களுக்கு தேவையான பணப்புழக்கம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை தேடி கண்டறியும் திறனை கொண்டுள்ளது. இந்த ரூபாயில் மதிப்பிடப்பட்ட வெளிநாட்டு நிறுவன முதலீடு இந்திய பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்துவதுடன், உலகளாவிய முதலீடுகளில் மேற்கத்திய நாடுகளின் ஏகபோக ஆதிக்கத்தை நீர்த்துப்போக செய்யும் ஒரு முக்கிய ‘புதிய தொடக்கமாகவே’ பார்க்கப்படுகிறது.