“வழக்கமாக, எனது பதிவு வைரலானால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் இப்போது அதன் நோக்கமே மாறிவிட்டது. என் இன்பாக்ஸ் முழுவதுமாக ஸ்பேம் பாக்ஸ் ஆக நிரம்பியுள்ளது. இதை அடுத்து, நான் LLM என்ற ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறந்த விண்ணப்பங்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏஐ சம்பந்தப்பட்ட வேலையில் சேருவதற்காக இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால், இதுபோன்ற எந்த வேலைவாய்ப்பு வந்தாலும் விண்ணப்பங்கள் மழைபோல் குவிகின்றன. மொத்தத்தில், தற்போது இது ஒரு கடும் போட்டி மிகுந்த துறையாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே சுதர்சன் காமத் தான், “ரெஸ்யூம் தேவையில்லை, எந்த கல்லூரியில் படித்தோம் என்பதும் தேவையில்லை. எங்களது கேள்விக்கு மட்டும் சரியாக பதில் சொன்னால், ₹40 லட்சம் சம்பளத்தில் வேலை தருகிறேன்,” என ஒரு பதிவை செய்து வைரல் ஆக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.