ரெஸ்யூம் எழுதி கொடுக்க ஒரு நிறுவனம் ஆரம்பித்த இந்தியர்… இன்று உலக அளவில் பிரபலம்..!

ரெஸ்யூம் வடிவமைப்பிற்கு பல்வேறு முறைகள் உள்ளன. ஆனால், சில குறிப்பிட்ட முறைகளில் மட்டுமே அது சிறப்பாக இருக்கும். இதை உணர்ந்த குருகிராமை சேர்ந்த ஷஷாங்க் ருஸ்தாகி என்பவர் ProfileCraft என்ற நிறுவனத்தை தொடங்கி, ரெஸ்யூம் எழுதி…

resume
ரெஸ்யூம் வடிவமைப்பிற்கு பல்வேறு முறைகள் உள்ளன. ஆனால், சில குறிப்பிட்ட முறைகளில் மட்டுமே அது சிறப்பாக இருக்கும். இதை உணர்ந்த குருகிராமை சேர்ந்த ஷஷாங்க் ருஸ்தாகி என்பவர் ProfileCraft என்ற நிறுவனத்தை தொடங்கி, ரெஸ்யூம் எழுதி கொடுப்பதையே முழு நேர தொழிலாக மாற்றியுள்ளார்.

எந்த ஒரு நிறுவனத்திற்கும் பணியில் சேர வேண்டும் என்றாலும், அவர் ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்ப வித்தியாசமான ரெஸ்யூம் அமைத்துக் கொடுக்கிறார். இதன் மூலம், அவருடைய சேவையை நாடி பலர் ProfileCraft-யை தொடர்பு கொள்கின்றனர். அதன் காரணமாக, இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்து, இன்று உலகளவில் பிரபலமானதாக மாறியுள்ளது.

முன்னதாக, ஷஷாங்க் ருஸ்தாகி டெல் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். ஆனால், எத்தனை ஆண்டுகள் சம்பளத்துக்காக வேலை பார்ப்பது> என்ற கேள்வியுடன், சொந்த தொழில் தொடங்க முடிவு செய்து ProfileCraft-யை நிறுவினார். இன்று, அவருக்குக் டெல் நிறுவனத்தில் கிடைத்த சம்பளத்தை விட பல மடங்கு வருவாய் வருவதாகவும், ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் தெரிகிறது.

வித்தியாசமாக சிந்தித்து, மாத்தி யோசித்தால் தான் இன்றைய போட்டி உலகில் வெற்றி பெற முடியும் என்பதற்கு இவருடைய தொழில் ஒரு சிறந்த உதாரணம். இதனால், அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.