63 வயசுல திருமண ஆசை.. US பெண், நடிகையுடன் டேட்டிங்.. ரத்தன் டாடாவின் வாழ்வில் காதல் மலர்ந்தது எத்தனை தடவ தெரியுமா..

By Ajith V

Published:

இந்தியாவின் தொழில்துறையில் மிக முக்கியமான ஒரு நபராக இருந்து 86 வயதில் விடைபெற்றார் ரத்தன் டாடா. இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் தொழிலில் சாதிக்க வேண்டும் என துடிக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வந்த ரத்தன் டாடா, கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில் தான் தனது 86 வது வயதில் உடல்நிலை மோசம் அடைந்ததால் நேற்றிரவு (09.10.2024) மரணம் அடைந்திருந்தார். கார், உப்பு என பல பொருட்கள் தொடங்கி டாடா எனும் நிறுவனம் எங்கு பார்த்தாலும் இருக்கும் அளவுக்கு அதனை மிகப்பெரிய அளவில் உயர்த்தி இருந்தார் ரத்தன் டாடா. அவரின் வாழ்க்கை பாதையும் நிச்சயம் பலருக்கும் ஒரு சிறந்த பாடமாகவும் இருந்து வரும் நிலையில், அதிக செல்வந்தருடைய நபர் என்பதை யாரிடமும் காட்டிக் கொள்ள மாட்டார்.

தற்போதுள்ள தலைமுறை வரையிலும் தெரிந்து வைத்துள்ள ரத்தன் டாடா இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வந்தவர். அவரது மறைவு இந்தியா மட்டுமில்லாமல் உலகின் இருக்கும் மக்கள் பலரது மத்தியிலும் அதிக வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அப்படி ஒரு சூழலில் தான் ரத்தன் டாடா திருமணம் செய்ய விரும்பியது பற்றியும், அவரது காதல் வாழ்க்கை பற்றியும் சில தகவல்கள் கவனம் பெற்று வருகிறது.

தனது வாழ்நாள் முழுக்க திருமணம் செய்யாமல் இருந்து தனியாகவே வாழ்ந்த ரத்தன் டாடா, 63 வது வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்றும் விரும்பி உள்ளார். தனிமையாக இருப்பதும் யாரும் அருகே இல்லை என் வெற்றிடத்தை உணர வைத்ததாகவும் சற்று கலக்கத்துடனும் ஒருமுறை அவர் குறிப்பிட்டுள்ளார். 63 வது வயதில் திருமணம் செய்ய வேண்டுமென விரும்பிய ரத்தன் டாடா, சரியான நபரை பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தனது தொழில் மற்றும் அது தொடர்பான நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்களால் திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் அமையவில்லை என்றும் ஆனால் அதற்கான ஆசை பலமுறை தனது மனதில் தோன்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் US-ல் ஒரு பெண்ணை ரத்தன் டாடா திருமணம் செய்வதற்கு தயாராக இருந்ததாகவும் ஆனால் இந்தியாசீனா பிரச்சனை காரணமாக அந்த பெண்ணால் வர முடியாமல் போய் அவர்கள் பிரிந்ததாவும் ஒருமுறை டாடா பேசி உள்ளார்.

நான்கு பேருடன் திருமணம் நடப்பதற்கான ஆலோசனைகள் ரத்தன் டாடாவுக்கு இருந்ததாகவும், ஆனாலும் ஏதாவது ஒரு பயத்தினால் அவை முன்னோக்கி செல்லவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதே போல நடிகை சிமி கரிவால் ன்பவரையும் ரத்தன் டாடா டேட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு சில நேரங்களில் மனைவி மற்றும் குடும்பம் இல்லாதது ஒரு வித வேதனையை கொடுத்ததாகவும் அதே நேரத்தில் இன்னொரு புறம் யோசிக்கும் போது தனியாக சுதந்திரமாக இருந்தது கூட சிறப்பாக இருந்ததாகவும் ரத்தன் டாடா கூறி உள்ளார்.