நூற்றுக்கணக்கான பேர் இரவோடு இரவாக வயல்வெளிகளில் தோண்ட ஆரம்பித்ததால், அந்த வயலுக்கு சொந்தமான விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், “ஒரு சிலர் தங்க நாணயங்களை எடுத்துவிட்டதாக” ஊருக்குள் வதந்தி பரவியதால், கிராம மக்கள் வேலைக்கே போகாமல், கடப்பாரை, மண்வெட்டியுடன் தங்கப் புதையலை தேடத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இது குறித்து புர்ஹன்பூர் எஸ்.பி. கூறியபோது, “அந்த இடத்தில் தங்கம் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்றும், புவியியல் அறிஞர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மண்ணை சோதனை செய்து, தங்கம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை” என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, வதந்திகளுக்கு பலியாக வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், கட்டுப்பாடு இன்றி கோட்டையை சுற்றி தோண்டுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த பகுதி மக்களை எச்சரித்து வருகின்றனர்.