ஒரு நாளைக்கு 800 லிட்டர் பால் கறப்பாங்க.. ஆனாலும் ஒரு துளி கூட விக்குறதில்ல.. உலகையே திரும்பி பாக்க வெச்ச இந்திய கிராமம்..

By Ajith V

Published:

இந்தியாவைப் பொறுத்த வரையில் நகர பகுதிகளில் அதிகமாக கடையில் இருந்து பாக்கெட் பால் வாங்கி வீட்டில் உபயோகப்படுத்தி வந்தாலும் கிராமம் என வரும்போது பெரும்பாலும் வீட்டில் உள்ள பால்களையே மக்கள் வாங்கி வருகிறார்கள். நகரம் என வரும்போது அங்கே மாடு மேய்த்து அதற்கான உணவை வழங்கி பராமரிக்க முடியாது என்ற நிலையில் கிராமத்தில் அப்படி ஒரு சூழல் கிடையாது.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் சில கிராமங்களில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் பசு மாடுகளை வளர்த்து பால் கறந்து வரும் நிலையில், விற்பனை செய்தும் வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வீட்டில் இருக்கும் சுத்தமான மாட்டு பாலையும் வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் தான் இந்தியாவில் ஒரு கிராமத்தில் அதனை விற்பனை செய்யாமல் இருக்கும் செய்தி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

நமது நாட்டில் உற்பத்தில் ஆகும் பாலிற்கு பெரும்பாலும் பெரிய ஆதாரமாக இருந்து வருவது கிராமப்பகுதிகள் தான். தங்கள் கால்நடைகள் சுரக்கும் பாலை கறந்து நிறுவனங்களுக்கோ அல்லது ஊர் மக்களுக்கோ விற்பனை செய்வார்கள். ஆனாலும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் ஒரு நாளைக்கு சுமார் 800 முதல் 1000 லிட்டர் பால் உற்பத்தி செய்தாலும் அதனை விற்பனை செய்யாமல் அப்படியே நேர்மாறாக இருந்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சிரோஹி (Sirohi) என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மஹந்த் முனிஜி ஷாம்ஷெர்கிரி மகாராஜ் என்ற முனிவர் தவம் செய்ய வந்ததாக கூறப்படுகிறது. அவர் இங்கே சில காலம் தவம் செய்ததாகவும் கூறப்படும் நிலையில், அப்போது அந்த கிராமத்து மக்களிடம் ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார்.

தங்களின் பசு மாடு மற்றும் எருமைகளிடம் இருந்து கிடைக்கும் பாலை விற்பனை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அப்படி மாடுகளின் விற்பனை செய்வது ஒரு குழந்தையை விற்பனை செய்ற்கு சமமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். முனிவரின் வாக்குறுதியை ஏற்றுக் கொண்ட அந்த கிராம மக்கள், கடந்த நான்கு தலைமுறையாக அவரது வாக்கை நிறைவேற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

சிரோஹி கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வரை இருக்கும் சூழலில், அங்கே 800 லிட்டருக்கு மேல் பால் தயாராவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் அதனை யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்றும் தெரிகிறது. சில முன்னணி நிறுவங்கள் அந்த கிராமத்தில் பால் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கவும் முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால், அந்த கிராம மக்கள் பால் கொடுக்க மறுத்ததுன் மகாராஜ் என்ற முனிவரின் கோரிக்கையை 100 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேற்றி வருவது நிச்சயம் பெரிய ஆச்சரியம் தான்.