ஆந்திரா பாஜக துணைத் தலைவர் விஷ்ணு வர்தன் ரெட்டி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். “இந்த மாதிரி யார் அஞ்சலி செலுத்துவார்கள்? ராகுல் காந்தி எந்த மரியாதையும் இல்லாமல் மாலை வீசுகிறார். மிகுந்த அகந்தை என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதள பயனாளர்களும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒருவர், “தன்னை ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறார்,” என்று கூற, இன்னொருவர் “நம்பிக்கையில்லாதவர்” என்று விமர்சித்தார். மூன்றாவது ஒருவர், “பெருமை பாராட்டும் மாப்பிள்ளை” எனக் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் ஒரு பதிவில் “இது மரியாதை அல்ல, முட்டாள்தனம்,” என தெரிவிக்க, மற்றொருவர் “அறிவு இல்லாத முட்டாள் இளவரசனின் அகந்தை தான் இதற்கு காரணம்’ என்று பதிவு செய்திருந்தார்.
இந்த நிகழ்வில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “சர்தார் பட்டேல் சாஹெப் எங்கள் இதயத்திலும் சிந்தனைகளிலும் வாழ்கிறார். அவரின் பாரம்பரியத்தை நாம் தொடர்ந்து கொண்டு செல்கின்றோம். அவரை நினைவு கூறும் நோக்கத்துடன் இந்த கூட்டத்தை அவரின் அருங்காட்சியகத்தில் நடத்துகிறோம்,” என உரையாற்றினார்.
இன்று ஒருசில அமைப்பை சேர்ந்தவர்கள் சர்தார் பட்டேலின் பாரம்பரியத்தை உரிமையாக்க முயல்கிறார்கள் என்பது நகைச்சுவையாக இருக்கிறது,” என்றும், பட்டேல் ஆர்எஸ்எஸ்சுக்கு தடை உத்தரவு விதித்திருந்ததை நினைவூட்டினார்.
https://x.com/SVishnuReddy/status/1909566094538686758