‘புது பைக் கூட வாங்கி தரேன்’.. தொலைந்து போன பைக்கிற்காக இளைஞர் செஞ்ச செயல்.. பின்னால் இருந்த எமோஷனல் காரணம்..

By Ajith V

Published:

இந்த பூமியில் அனைவருக்குமான வாழ்க்கை என்பது மிக மிக ஒரு சிறிய அத்தியாயம் தான். அதற்கு நடுவே சண்டை, சச்சரவு, பிரிவு, பொறாமை, ஆணவம் என நெகடிவ்வான விமர்சனங்களும் நிறைய நிரம்பி உள்ளது. இதனைத் தாண்டி இன்னொரு பக்கம் உணர்வுகளுக்கும், உண்மைகளுக்கும் இடம் கொடுக்கும் நபர்களும் இங்கே உள்ளனர்.

மேலும் இன்னொருவர் பார்வைக்கு சாதாரணமாக தெரியும் விஷயங்கள் அப்படி அன்பை வெளிக்காட்டும் நபர்களுக்கு பெரிய விஷயமாக கூட தோன்றலாம். தான் மிகவும் விரும்பிய ஒரு நபரை நினைத்து ஒரு சிறிய காகிதத்தை பத்திரமாக வைத்திருந்தால் கூட அது நிச்சயம் அவர்களுக்கு பெரிய பொக்கிஷம் தான்.

அந்த வகையில், இளைஞர் ஒருவர் சமீபத்தில் தனது பைக்கை தொலைக்க, அதற்காக அவர் செய்த விஷயமும், பின்னால் உள்ள காரணமும் பலரையும் கண்ணீர் வி வைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியை சேர்ந்தவர் தான் அபய்வ்குலே (Abhay Chaugule). கடந்த தசராவின் போது சிவாஜி மகாராஜ் சிலை அருகே அபய்யின் கருப்பு நிற ஆக்டிவா பைக் திருடு போனதாக கூறப்படுகிறது.

டனடியாக, சமூக வலைத்தளத்தின் உதவியை நாடிய அபய், மிக உருக்கமாவும் ஒரு விஷயத்தை கேட்டுக் கொண்டுள்ளார். ஒருவரது பைக் திருடு போனால் அவர்கள் அதை நினைத்து அதிக வருத்தம் கொள்வார்கள். ஆனால் அபய்யோ எனது பைக்கை திருப்பி கொடுத்தால் புதிய பைக்கை கூட வாங்கித் தர தயார் என திருடனுக்கு கோரிக்கையை வைத்துள்ளார்.

அபய்யின் தாய் புற்றுநோய் காரணமாக மறைந்து போயுள்ளார். இதனால், தாயின் நினைவா அவர் வாங்கிய ஆக்டிவா பைக்கையும் வைத்துள்ளார் அபய். இவரது தந்தையும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் தனது பெற்றோர்களின் நினைவாக பெரிய சொத்தா தனது பைக்கையும் சொந்தமாக வைத்துள்ளார் அபய்.

தனை ஒருவர் திருடி விட்டு சென்றதால் தான் வசித்து வரும் பகுதிக்கு அருகே முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியும் அதற்கு பலன் கொடுக்கவில்லை. இதனால் பொது வெளிக்கு வந்த அபய், பெரிய பேனர் ஒன்றில் தனது வாகனம் குறித்த விவரங்களை எழுதி வைத்ததுன் தாயின் கடைசி நினைவு அதுதான் என்றும் எமோஷனலாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது பைக்கை எடுத்தவர்கள் திருப்பி தர வேண்டும் என்றும், கடினமாக உழைத்து எனது தாய் இந்த பைக்கை சொந்தமாக வாங்கினார் என்றும் அபய் குறிப்பிட்டுள்ளார். இது தவிர, வேண்டுமென்றால் புது பைக்கை கூட வாங்கி தருகிறேன், எனது பைக்கை திருப்பி கொடுங்கள் என அபய் எழுதியது தான் பலரையும் கண்ணீர் விட வைத்துள்ளது.

தாய், தந்தையர் மீது எந்த அளவுக்கு பாசம் இருந்தால் இப்படி அவரால் குறிப்பிட்டிருக்க முடியும் என்றும் நிச்சயம் அபய்யின் பைக் கிடைத்து விடும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.