அந்த மெசேஜ்களில், அரசாங்கத்தின் முத்திரை இருப்பது போல் காணப்படும். அதுமட்டுமின்றி, “நீங்கள் ஆபாச இணையதளத்தை பார்க்கிறீர்கள். உங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க போகிறோம்” என்று கூறி, கவுண்ட்டவுன் டைமர் வரும். இந்த டைமர் முடிவதற்குள் நீங்கள் அபராத தொகையை செலுத்தாவிட்டால், உங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருக்கும்.
இதனால் பயந்து நீங்கள் பணம் செலுத்தி விட்டால், அந்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, இது போன்ற பாப்-அப் மெசேஜ்கள் வந்தால், பதட்டம் அடையாமல் இருக்க வேண்டும். உண்மையான சட்ட அமலாக்க நிறுவனங்கள் எந்த விதமான அபராதத்தையும் கேட்டு மெசேஜ் அனுப்பாது.
அதனால், இப்படியான மெசேஜ்கள் வந்தால், என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.
உடனே பிரவுசரை மூடிவிடுங்கள். பாப் அப் மெசேஜை தொடாமல் பிரவுசரை மூடுவது எப்படி என்பதையும் பார்ப்போம்.
Windows: Ctrl + Alt + Delete -> Task Manager -> Browser force close.
Mac: Command + Option + Escape -> Force Quit browser.
ஆன்டி வைரஸ் மென்பொருள் பயன்படுத்துங்கள். பாப் அப்பை மூடிய பிறகு மொபைல் / கணினியில் பாதுகாப்பு ஸ்கேன் செய்யுங்கள்.
பாப்அப் மெசேஜ் வருவதை தவிர்க்க சந்தேகத்திற்கிடமான இணையதளங்களில் பாப்அப்புகளை தடுக்க Browser Settings-ஐ மாற்றவும்.