டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனக்குப் பிடித்தமான பீட்சா மற்றும் கூல்ட்ரிங்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு, அதன் பின்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ப்ரீத்தி என்பவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இரண்டு வருடங்களுக்கு முன், தங்கள் சொந்த ஊரில் நடந்த குடும்ப விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோதுதான், தனது தூரத்து உறவினர் ஒருவரை சந்தித்தார். இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, அதன் பின் காதலாக மாறிய நிலையில், இருவருமே இரு குடும்பத்திற்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணம், ப்ரீத்தியின் நெருங்கிய தோழி ஒருவருக்கு மட்டுமே தெரிந்த நிலையில், அடிக்கடி இருவரும் வாட்ஸப் மூலம் பேசிக்கொள்வதும், சில சமயம் ரகசியமாக சந்திப்பதுமாக இருந்தது.
இந்த நிலையில், திடீரென ப்ரீத்தி தனது வீட்டில் உள்ள உறுப்பினர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார். அம்மா கூறிய சப்பாத்திக்கான மாவு தயார் செய்யும் வேலையை பார்த்தார். அதன் பிறகு, பீட்சா மற்றும் குளிர்பானம் ஆர்டர் செய்து அதை சாப்பிட்டுவிட்டு, தாயிடம் கலகலப்பாக பேசிய பிறகு, திடீரென தனது அறைக்குச் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன், அவர் தனது கணவருக்கு மொபைல் மூலம் மெசேஜ் அனுப்பியதாகவும், அழைத்ததாகவும், ஆனால் அவரிடமிருந்து பதிலே வரவில்லை என்றும், விரக்தியில் தூக்கில் தொங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அவரது நெருங்கிய தோழியையும் கேட்டபோது, “இருவருக்கும் இடையிலான சில வாட்ஸப் செய்திகள் எனக்கு தெரியும்” என்றும், அதை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு தான், அவருக்கு திருமணம் ஆன விஷயம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வந்தது.
திருமணத்திற்கு பின் ரகசியமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்த நிலையில், திடீரென ப்ரீத்தியின் கணவர் அவரை வெறுத்துவிட்டதாகவும், தனது எந்த மெசேஜுக்கும் பதில் அளிக்கவில்லை என்றும், மொபைல் போனில் அழைத்தாலும், எடுக்க மாட்டேன் என்றார் என்றும், இதனால் ஏற்பட்ட விரக்தியினால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
