பன்றிகளும் பாகிஸ்தானியர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.. இந்தூரில் வைக்கப்பட்ட போர்டால் பரபரப்பு..!

  பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நாடெங்கிலும் இருந்து வருந்தும் மனநிலையானது கடும் கோபமாக மாறியுள்ள நிலையில், இந்தூரில் உள்ள புகழ்பெற்ற உணவக தெருவில் ஒரு போர்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த போர்டில்…

indore

 

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நாடெங்கிலும் இருந்து வருந்தும் மனநிலையானது கடும் கோபமாக மாறியுள்ள நிலையில், இந்தூரில் உள்ள புகழ்பெற்ற உணவக தெருவில் ஒரு போர்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த போர்டில் தைரியமாக: “பன்றிகளும் பாகிஸ்தானியர்களும் எங்கள் உணவக தெருவில் அனுமதிக்கப்படமாட்டார்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தோரில் புகழ்பெற்ற Chappan Duk என்ற உணவக தெருவில்  பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனீர் முகத்தை பன்றி முகமாக மாற்றிய புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர் பார்வையாளர்களை ஈர்த்து, செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளும் இடமாக மாறியுள்ளது.

இந்த போர்டின் நோக்கத்தை விளக்கிய Chappan Duk உணவக சங்கத்தின் தலைவர் குஞ்ஜன் ஷர்மா கூறியதாவது: “பாகிஸ்தான் இந்தியர்களை அவர்களது மதம் காரணமாக குறிவைத்து தாக்கியது. எனவே நாங்கள் இவ்வாறு எதிர்வினை காட்டுகிறோம். நாங்கள் நியாயத்திற்கு போராடுகிறோம். பிரதமர் மோடியின் வலுவான பதிலடிக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

இந்த உணவு தெருவில் உள்ள வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கருப்பு பட்டு அணிந்து தங்களது ஒற்றுமையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தினர்.

இந்தூரில் உள்ள வழக்கறிஞர் லோகேஷ் மங்களம், பிரதமருக்கு கடிதம் எழுதிய கடிதத்தில் பெஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதியை கொன்ற எந்த இந்தியருக்கும்  ரூ.1 கோடி பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: “100 பயங்கரவாதிகள் அழிக்கப்படுமானால் ரூ.100 கோடி அளிக்க தயார். எங்கள் வருமானத்தில் இருந்து கொஞ்சம் தொகையை நமது பாதுகாப்பிற்காகவே பயன்படுத்துகிறோம்’ என தெரிவித்தார்.

அத்துடன், நாட்டுக்காக செயல்படுகிற எவருக்கும் இலவச சட்ட உதவியும் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.