இந்த நிலையில் 8வது ஊதியக் குழு 2026ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 7வது ஊதியக்குழு செப்டம்பர் 25, 2013 அன்று அங்கீகரிக்கப்பட்டு, பிப்ரவரி 28, 2014 அன்று அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது என்ற நிலையில் 13 ஆண்டுகள் கழித்து அடுத்த ஊதிய குழு அமலுக்கு வருகிறது
8வது ஊதிய குழுவில் சம்பளம் எவ்வளவு கூடும்?
8வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி 25-30% வரை சம்பளம் அதிகரிக்கக்கூடும், மேலும் ஓய்வூதியங்கள் அதே விகிதத்தில் உயரக்கூடும். மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.40,000ஐ கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
எடுத்துக்காட்டாக ஒரு மத்திய அரசு ஊழியரின் தற்போதைய அடிப்படை ஊதியம் ரூ.40,000 என வைத்துக்கொண்டால், புதிய ஊதியம் ரூ.91,200 ஆக உயரக்கூடும். அதன்பின் Dearness Allowance (DA) – புதிய அடிப்படை ஊதியத்தின் 70% என எடுத்துக்கொண்டால், DA ரூ.63,840 ஆகும். House Rent Allowance (HRA) புதிய அடிப்படை ஊதியத்தின் 24% என எடுத்துக்கொண்டால், HRA ரூ.21,888 ஆகும். எனவே மொத்த ஊதியம் அடிப்படை ஊதியம் + DA + HRA எனக் கணக்கிட்டால், மொத்த ஊதியம் ரூ.1,76,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.