திருப்பதியில் தரிசனம் செய்ய இனி வேற்று மதத்தினருக்கு இது கட்டாயம்.. தேவஸ்தானம் அறிவிப்பு

By John A

Published:

லட்டு பிரசாத சர்ச்சையைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த அதிரடி உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த தகவலையடுத்து நாடு முழுக்க பெரும் கண்டனங்கள் எழுந்தது.

மேலும் ஆய்வக பரிசோதனையிலும் உறுதி செய்யப்பட்டதால் தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி புரடக்ட்ஸ் நிறுவனம் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்தச் சர்ச்சை ஓயாது சென்று கொண்டிருக்கும் நிலையில், திருப்பதியில் புரட்டாசி பிரமோத்சவ திருவிழாவும் நடைபெற உள்ளது. இதனால் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வெள்ளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் திருப்பதி கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் வருகை தருகின்றனர்.

ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா.. ஆசியக் கண்டத்தில் மூன்றாவது வல்லரசாக உயர்வு

இதனால் இது சர்வதேச கோவிலாக விளங்குகிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் இன்று ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய விரும்பும் வேற்று மதத்தினர் தனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அறிவிக்ப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சில கோவில்களில் இந்துக்கள் அல்லாதோர் கோவில்களில் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில் திருப்பதியிலும் தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு பக்தர்களிடம் சலசலப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.