ஒடிசா மாநிலத்தில் ஏற்கனவே தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து செய்திகள் வெளியான நிலையில், தற்போது விஞ்ஞானிகள் தங்கம் இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும், எதிர்பார்த்ததை விட அதிகமாக, அதாவது, டன் கணக்கில் தங்கம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், சீனாவில் ஆயிரம் கிலோ தங்கம் பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும், சீன விஞ்ஞானிகள் விரைவில் இந்த தங்கத்தை வெட்டி எடுக்க திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த தகவலின் தாக்கம் அடங்கும் முன்பே, சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் புதிய தங்கச் சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,
விஞ்ஞானிகள், சுந்தர்கர், நவரங்க்பூர், கென்ஜார், மற்றும் தேவ்கர் ஆகிய மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் தங்கக் கையிருப்புகளை கண்டறிந்துள்ளனர். மேலும், பௌத், மால்கன்கிரி, சம்பல்பூர் போன்ற பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மரேடிஹி, சுலெய்பட், மற்றும் படம்பஹாட் போன்ற இடங்களும் இந்த ஆய்வுத் திட்டத்தில் அடங்குகின்றன.
மேற்கண்ட பகுதிகளில் தங்கம் டன் கணக்கில் இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த தங்கத்தை வெட்டி எடுத்து வெளியே கொண்டு வந்த பின்னரே உறுதியாகத் தெரியவரும்; அதுவரை யூகத்தின் அடிப்படையில் மட்டுமே டன் கணக்கில் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.