மனிதர்களுக்கு மட்டுமல்ல.. மரங்களுக்கும் ஆதார் கார்டு.. புதிய திட்டம் அறிமுகம்..!

  ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அத்தியாவசியமானது என்பதும் வங்கி கணக்கு தொடங்குவது முதல் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது முதல் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில்…

chinar

 

ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அத்தியாவசியமானது என்பதும் வங்கி கணக்கு தொடங்குவது முதல் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது முதல் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில் தற்போது மனிதர்களுக்கு மட்டும் இன்றி மரங்களுக்கும் ஆதார் கார்டு என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

காஷ்மீரின் புகழ்பெற்ற சினார் மரங்களை சட்டவிரோத வெட்டும் நடவடிக்கைகளிலிருந்து மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களிலிருந்து பாதுகாக்க, அதிகாரிகள் “டிஜிட்டல் ட்ரீ ஆதார்” (Digital Tree Aadhaar) என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ், காஷ்மீரில் உள்ள ஆயிரக்கணக்கான சினார் மரங்களுக்கு தனிப்பட்ட அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜம்மு மற்றும் காஷ்மீர் வன ஆராய்ச்சி நிறுவனம்  ஜியோகிராபிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (GIS) மற்றும் QR குறியீடுகளை பயன்படுத்தி 28,560 சினார் மரங்களை ஜியோடேக் செய்துள்ளது. இதன் மூலம், இம்மரங்களை நேரடி கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முயற்சி, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை தடுக்கவும்,  மரங்களை சிறப்பாக பாதுகாக்கவும் உதவும் என கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு சினார் மரத்திற்கும் இப்போது ஒரு தனிப்பட்ட அடையாளம் உள்ளது. இதன் மூலம் மரத்தின் ஆரோக்கியம், வளர்ச்சி மற்றும் இருப்பிடத்தை கண்காணிப்பது எளிதாகிறது,” என இந்த திட்டம் குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காஷ்மீரின் சினார் மரங்கள், அக்டோபரில்  இலைகள் சிவப்பாக மாறும், வசந்த காலத்தில் பசுமையாக மாறும் தன்மை கொண்டது. இந்த மரங்கள் காஷ்மீரின் மரபுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், வேகமான நகர்ப்புற வளர்ச்சி, காலநிலை மாற்றம் மற்றும் அனுமதியில்லா மர வெட்டல் காரணமாக அவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

ஒரு காலத்தில், காஷ்மீரில் உள்ள சினார் மரங்களின் எண்ணிக்கை 4,000 முதல் 40,000 வரை இருந்ததாகவும், ஆனால், 2021ல் ஒரு கட்டமைக்கப்பட்ட கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட போது, வெறும் 18,000 மரங்கள் மட்டுமே இருந்ததாக அறியப்பட்டது.  எனவே தான் தற்போது இருக்கும் மரங்களையாவது பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த “டிஜிட்டல் ட்ரீ ஆதார்” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.