ஜிஎஸ்டி சீர்திருத்தம் முழுமையாக முடிந்தது.. நிர்மலா சீதாராமனுக்கு கொடுக்கப்பட்ட அடுத்த அசைன்மெண்ட்.. அடுத்ததாக சுத்தப்படுத்தும் துறை சுங்கத்துறை தான்.. களையெடுக்கும் நேரம் வந்துவிட்டது.. சுங்கவரி குறைப்பு.. கடத்தலை தடுக்க டெக்னாலஜியை பயன்படுத்துதல்.. எளிய வகையில் சுங்கவரி வசூலித்தல் போன்றவை தொடங்கும்.!

சமீபத்தில் ஒரு தனியார் ஊடக மாநாட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்ட போது, இந்திய பொருளாதாரத்திற்கு இது ஒரு மைல்கல் ஆண்டாக இருந்ததோடு, வருமான வரி மாற்றங்கள், புதிய வருமான…

nirmala 1

சமீபத்தில் ஒரு தனியார் ஊடக மாநாட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்ட போது, இந்திய பொருளாதாரத்திற்கு இது ஒரு மைல்கல் ஆண்டாக இருந்ததோடு, வருமான வரி மாற்றங்கள், புதிய வருமான வரி சட்டம், ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவராக இருந்து மேற்கொண்ட சில முக்கிய முயற்சிகள் என பல பெரிய சீர்திருத்தங்களை இந்த ஆண்டு கண்டதாக தெரிவித்தார்.

இந்த சூழலில், ‘அடுத்தது என்ன?’ என்பதே அனைவரின் பிரதான கேள்வியாக இருந்தது. ஏனெனில், கடந்த 20 ஆண்டுகளாக பலரால் பேசப்பட்டு வந்த நேரடி வரி விதிப்பு சட்டத் திருத்தம் மற்றும் 2017 முதல் பேசப்பட்டு வந்த ஜிஎஸ்டி விகித சீரமைப்பு போன்ற பல பெரிய விஷயங்களை நிதியமைச்சர் இந்த ஆண்டில் சாதித்து காட்டியுள்ளார். எனவே, வரவிருக்கும் சீர்திருத்தங்கள், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குதல் போன்ற சீர்திருத்தங்களாக இருக்குமா அல்லது வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது போன்ற படிப்படியான மேம்பாடுகளாக இருக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், ’நான் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. நான் பட்ஜெட்டுக்கு முன்பாக ரகசியத்தை தெரிவிக்கவில்லை என்றாலும், எங்களது அடுத்த பெரிய பணி என்பது சுங்க வரி துறையின் முழுமையான மறுசீரமைப்புதான் என்று தெளிவுபடுத்தினார். சுங்க வரி சட்டங்களை பின்பற்றுவது மக்களுக்கு கடினமானதாகவும், சோர்வளிப்பதாகவும் இருக்கக்கூடாது என்றும், அதை மேலும் வெளிப்படைத்தன்மையுடன் எளிமையாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சுங்க வரி சீர்திருத்தம் குறித்து விளக்கிய அவர், முன்னர் வருமான வரி சட்டத்தை எளிமையாக்கியது போலவே, இந்த துறையிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றார். வருமான வரித்துறையில், வரி கட்டணங்களைவிட வரி நிர்வாகமே சிக்கலாக இருந்தது. அது வலிமிகுந்ததாகவும் சில சமயம் வேதனை அளிப்பதாகவும் இருந்தது. அதன் காரணமாகத்தான் ‘வரி பயங்கரவாதம்’ என்ற சொல் உருவானது. அதை நாங்கள் மாற்றி, வருமான வரி தாக்கல் செய்வதை சோர்வில்லாத பயிற்சியாக மாற்றினோம்.

இதேபோன்ற சில நல்ல விஷயங்களை சுங்க வரித் துறைக்கும் கொண்டு வர விரும்புவதாகவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது மற்றும் சுங்க அதிகாரிகளின் வேலை பளுவை குறைத்து, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆவணங்களை பரிசோதிக்கும் முறையை கொண்டு வருவதன் மூலம், முறைகேடான கடத்தல் பொருட்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமும் சீர்திருத்தங்களை செயல்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, சில குறிப்பிட்ட பொருட்களுக்கான சுங்க வரிகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதையும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், உலகளாவிய அளவை காட்டிலும் அதிகமாக உள்ள சில பொருட்களின் சுங்க வரிகளை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுங்க வரித் துறையின் முழுமையான மறுசீரமைப்பு பணி, அடுத்த பெரிய ‘சுத்தப்படுத்தும் பணி’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.