இந்தியா இல்லாமல் ஒன்னுமே செய்ய முடியாது.. உடனடியாக மோடியுடன் பேசுங்கள்.. மோடியை சாதாரணமாக எடை போட வேண்டாம்.. இந்தியாவை பகைத்தால் அமெரிக்காவுக்கு பேரழிவு.. நிக்கி ஹேலி கடும் கண்டனம்..!

அமெரிக்காவின் முன்னாள் ஐ.நா. தூதரான நிக்கி ஹேலி, சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்த, இந்தியாவுடனான உறவுகளை அமெரிக்கா சரிசெய்ய வேண்டியதன் அவசியத்தை அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சற்று கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளார். நட்பு நாடான…

nikki

அமெரிக்காவின் முன்னாள் ஐ.நா. தூதரான நிக்கி ஹேலி, சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்த, இந்தியாவுடனான உறவுகளை அமெரிக்கா சரிசெய்ய வேண்டியதன் அவசியத்தை அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சற்று கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளார். நட்பு நாடான இந்தியாவை அந்நியப்படுத்துவது, அமெரிக்காவின் நலன்களுக்கு பெரும் ஆபத்து என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் நலன்களுக்கு பெரும் ஆபத்து

இந்தியாவிற்கு எதிரான வர்த்தகக் கொள்கைகள், அமெரிக்காவின் நீண்டகால நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிக்கி ஹேலி தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவுடன் உறவுகளை முறித்துக்கொள்வது என்பது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வளர்ந்து வரும் சக்தியை புறக்கணிப்பதாகும். இந்தியாவின் சக்தி வளர்ந்தால் மட்டுமே, உலக அளவிலான சீர்திருத்தத்தை மாற்றி அமைக்க முடியும், சீனாவின் கொட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா – சீனா வேறுபட்ட நாடுகள்

இந்தியாவையும் சீனாவையும் ஒரே பிரிவில் வைக்கக் கூடாது என்று ஹேலி அழுத்தமாக தெரிவித்துள்ளார். இந்தியாவை ஒரு கூட்டாளியாக அல்லாமல், எதிரியாக நடத்துவது ஒரு பெரிய தவறு என்றும், இது தவிர்க்கக்கூடிய ஒரு அச்சுறுத்தல் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள சீனாவின் வளர்ச்சி, சுதந்திர உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால், ஜனநாயக நாடான இந்தியாவின் வளர்ச்சி ஒருபோதும் சுதந்திர உலகிற்கு அச்சுறுத்தல் அல்ல என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நேரடி பேச்சுவார்த்தைக்கான அவசரம்

தற்போதைய உறவு சிக்கலைத் தீர்க்க, அதிபர் டிரம்ப் உடனடியாகப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நிக்கி ஹேலி வலியுறுத்தியுள்ளார். மோதல் போக்கை கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் போன்ற விஷயங்களில் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் திறன்களும், மத்திய கிழக்கில் அதன் ஈடுபாடும் அப்பகுதியை நிலைப்படுத்துவதற்கு அவசியமானவை என்றும், அது அமெரிக்காவுக்கும் நன்மை பயக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு பேரழிவு..

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தற்போதைய பிளவு தொடர்ந்து நீடித்தால், அது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய பேரழிவாக மாறும் என்று நிக்கி ஹேலி கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பாதிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவையும் அமெரிக்காவையும் ஒருவருக்கொருவர் எதிராக பயன்படுத்திக்கொள்ள சீனாவுக்கு ஒரு வாய்ப்பையும் உருவாக்கும் என்றும் அவர் கூறினார். ஆசியாவில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரே நாடாக இந்தியா விளங்கும் நிலையில், இரு நாடுகளின் உறவில் பிளவு ஏற்படுவது 25 ஆண்டு கால ராஜதந்திர முயற்சிகளை பாழாக்கிவிடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.