Swiggy, Zomato நிறுவனங்கள் தங்களது வியாபாரத்தை விரிவுப்படுத்த புதிய திட்டம்… அடடா… என்ன ஒரு ராஜதந்திரம்…

By Meena

Published:

கடந்த சில ஆண்டுகளாகவே உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் பிரதானம் ஆகிவிட்டது. கொரோனா காலகட்டத்தில் Swiggy, Zomato நிறுவனங்கள் உச்சத்தை தொட்டன. அதற்குப் பிறகும் மக்கள் இந்த ஆப்களில் உணவு ஆர்டர் செய்வதையே விரும்பினார். பின்னர் இந்த ஆப்கள் பரிமாணம் பெற்று மளிகை சாதனங்கள், அசைவ கறிகள், மீன்கள், பார்சல்களை கைமாற்றுவது போன்றவற்றை செய்தது. தற்போது இந்த நிறுவனங்கள் மீண்டும் ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

அந்த திட்டம் என்னவனென்றால், நாட்டின் பல மாநிலங்களில் விரைவில் மதுவை ஹோம் டெலிவரி செய்வது என்பதாகும். ஒரு அறிக்கையின்படி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா, கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட பல இந்திய மாநிலங்கள் Swiggy, BigBasket, Zomato மற்றும் Blinkint மூலம் ஆன்லைனில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யத் திட்டமிட்டு உள்ளது. எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, ஆரம்ப கட்டத்தில், பீர், ஒயின் போன்ற குறைந்த ஆல்கஹால் சதவிகிதம் கொண்ட தயாரிப்புகளை ஹோம் டெலிவரி செய்ய இந்த நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளது.

இந்த நடவடிக்கையின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து அதிகாரிகள் தற்போது மதிப்பீடு செய்து வருவதாக அறிக்கை கூறுகிறது. தற்போது ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே மதுவை ஹோம் டெலிவரி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி, “இந்த நடவடிக்கை மக்களின், குறிப்பாக பெரிய நகரங்களில் மாறிவரும் உணவுப் பழக்கத்தை கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்படுகிறது. பெரும் எண்ணிக்கையிலான நுகர்வோர் இந்த நடுத்தர அளவிலான ஆல்கஹால் பொருட்களை உணவுடன் ஒரு பொழுதுபோக்கு பானமாக உட்கொள்கிறார்கள். மோசமான கடைகளினால் ஏற்பட்ட முன் அனுபவம் காரணமாக பாரம்பரிய மதுபானக் கடைகளில் இருந்து ஷாப்பிங் செய்ய விரும்பாத பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் தேவைகளையும் இது பூர்த்தி செய்யும்.

கோவிட்-19 ஊரடங்கின் போது, ​​மகாராஷ்டிரா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தற்காலிகமாக மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய அனுமதிக்கப்பட்டது. ET இன் அறிக்கையின்படி, இந்த மாநிலங்களில் கோவிட் காலத்தின் போது மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வது அனைத்து தற்காலிக கட்டுப்பாடுகளையும் மீறி வெற்றிகரமாக இருந்தது.

இந்த அறிக்கையின்படி, ஆன்லைன் டெலிவரி காரணமாக, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அப்போது 20 முதல் 30 சதவீதம் வரை விற்பனை அதிகரித்ததாக சில்லறை வணிக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அதை தென்னிந்திய மாநிலங்களில் இந்த அதிக ஆல்கஹால் இல்லாத மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய Swiggy, Zomato, Bigbasket ஆகிய நிறுவனங்கள் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்தவும், பெருக்கவும் முடியும் என்பதால் இந்த முடிவுக்கு அந்நிறுவனங்கள் வந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags: swiggy