இந்திய தேசிய விளையாட்டு தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பம்சங்கள்…

Published:

இந்திய தேசிய விளையாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. விளையாட்டு நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். விளையாட்டு நமது ஆரோக்கியத்தையும் உடல் தகுதியையும் மேம்படுத்துகின்றன. விளையாட்டு விளையாடுவது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். தேசிய விளையாட்டு தினம் ஆரோக்கியத்திற்காக விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. தேசிய விளையாட்டு தினம் முதன்முதலில் 2012 இல் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு
ஆகஸ்ட் 29 ஆம் தேதி அலகாபாத்தில் உள்ள ராஜபுத்திர குடும்பத்தில் 1905 ஆம் ஆண்டு பிறந்த ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்ந் சந்தின் பிறந்தநாளைக் குறிக்கிறது. அவரின் பிறந்தநாளை தான் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. தயான் சந்த் தனது தந்தையை பின்பற்றி ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் தான் தயான்ந் சந்த் ஹாக்கியை தேர்ந்தெடுத்தார். Hockey Magician எனப்படும் தயான்ந் சந்த் பல்வேறு விருதுகளை வென்றவர் மற்றும் 1928, 1932 மற்றும் 1936 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் ஒரு பகுதியாக இருந்தார். 22 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வாழ்க்கையில் 400 க்கும் மேற்பட்ட கோல்களை அடித்தார்.

தயான்ந் சந்த் 1936 பெர்லின் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் மூன்று கோல்களுடன் அணியை வழிநடத்தினார், அவர்கள் ஜெர்மனிக்கு எதிராக 8-1 என வென்றனர். தயான்ந் சந்தின் தலைமையில் இந்தியாவின் ஹாக்கி சாதனைகளின் உச்சத்தை இந்த விளையாட்டு தினம் முதன்மைப்படுத்துகிறது.

ஓய்வு பெற்ற பிறகும், அவர் விளையாட்டிற்கு தொடர்ந்து பங்களித்தார் தயான்ந் சந்த். பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டுக் கழகத்தில் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியதோடு, ராஜஸ்தானில் உள்ள பல பயிற்சி முகாம்களில் பயிற்சியாளராக இருந்தார் தயான்ந் சந்த்.

முக்கியத்துவம்
ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினத்தன்று, இந்திய குடியரசுத் தலைவர் அர்ஜுனா விருது, துரோணாச்சார்யா விருது மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது போன்ற விளையாட்டு தொடர்பான அனைத்து விருதுகளையும் அந்தந்த விளையாட்டில் தேசத்தை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை கௌரவிக்கும் வகையில் வழங்குகிறார்.

2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த கேலோ இந்தியா இயக்கம், பல ஆண்டுகளாக இந்த நாளில் அரசாங்கம் தொடங்கியுள்ள விளையாட்டு முயற்சிகளில் ஒன்றாகும்.

கொண்டாட்டங்கள்
இந்த நாளில் நாடு முழுவதும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. பல கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் தேசிய விளையாட்டு தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றன. தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாட நீங்கள் ஹாக்கி, டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து, கோ-கோ, ஓட்டம், செஸ், கேரம், டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், யோகா போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கலாம்.

 

மேலும் உங்களுக்காக...