இது என்னடா லட்டுக்கு வந்த சோதனை..! மாட்டுக் கொழுப்பு, குட்காவைத் தொடர்ந்து உள்ளே இருந்த எலிக்குஞ்சுகள்

By John A

Published:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜுன் மாதம் வழங்கப்பட்ட பிரசாத லட்டுக்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருப்பதாக உணவுப் தரக் கட்டுப்பாடு ஆய்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. வைணவர்களின் மதஉணர்வுகளை அவமதித்ததாக தேவஸ்தானம் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இதற்கு முன்னர் ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஆட்சியில் இந்த சம்பவம் நடைபெற்றதால் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.

சைவ உணவுகளை உண்டு அதனைப் பின்பற்றி வருபவர்கள் மத்தியில் திருப்பதி பிரசாத லட்டில் இவ்வாறு கலப்படம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் திருப்பதி தேவஸ்தானம் இதுகுறித்து பிரசாத லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கலைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி புரொடக்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் அங்கே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது அல்லவோ டெக்னாலஜி வளர்ச்சி.. ஆட்டோ கட்டணம் வசூலிக்க ஓட்டுநர் எடுத்த புது ரூட்.. வியந்த ரயில்வே அமைச்சர்..

இந்நிலையில் லட்டு கலப்படத்தினைத் தொடர்ந்து நேற்று திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் ஒன்று இருந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ச்சியாக இதுபோன்று புகார்கள் வந்ததையடுத்து நாடுமுழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மும்மை சித்தி விநாயகர் கோவில் பிரசாதத்திலும் இதுபோன்ற சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.

மும்பையில் பிரபல சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து தினசரி பக்தர்கள் வருவது வழக்கம். அங்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இக்கோவிலில் வைக்கப்பட்டிருந்த பிரசாத லட்டுக்களுக்கு மத்தியில் எலிக்குஞ்சுகள் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லட்டுப் பாக்கெட்டுகளை எலிகள் கடித்துள்ளது போன்ற புகைப்படமும் வெளியாகி உள்ளது. ஏற்கனவே திருப்பதி லட்டு சர்ச்சை ஓயாத நிலையில் தற்போது அடுத்த லட்டு சர்ச்சையும் சேர்ந்துள்ளதால் கோவில்களில் பிரசாதங்களின் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி உள்ளதாக பக்தர்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.