அடேங்கப்பா, இப்படி ஒரு டெடிகேஷனா.. பலரையும் சபாஷ் போட வைத்த உணவு டெலிவரி ஊழியர்.. குவியும் பாராட்டு

By Ajith V

Published:

நமக்கெல்லாம் எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் மழை அல்லது வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் வெளியே இறங்குவதற்கு யோசிக்க தான் செய்வோம். ஆனால் அப்படிப்பட்ட பெரும் மழையிலும் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் செய்த விஷயம், தற்போது அனைவரையுமே மனம் கரைய வைத்துள்ளது.

நாடெங்கிலும் நகரப் பகுதிகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் வீட்டில் சமைத்து உண்பதையோ அல்லது ஹோட்டலில் சென்று உண்பதை விட நேரடியாக ஆர்டர் செய்து உண்ணும் பழக்கத்தையும் அதிகமாக கொண்டுள்ளனர். ஒரு சில நிமிடங்களிலேயே நமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து விடலாம் என்பதால் வேலைப்பழுவிற்கு மத்தியில் தங்கள் வேலைக்கான நேரத்தை குறைத்துக் கொள்ளவும் யோசிக்கின்றனர்.

இதன் காரணமாக உணவு டெலிவரி ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்க நாம் எங்கு சென்றாலும் பலர் உணவைக் கொண்டு செல்வதை பார்க்க முடியும். இதில் நாம் உணவு டெலிவரி செய்பவர்கள் என சாதாரணமாக கடந்து சென்றாலும் அவர்களுக்கு பின்னால் இருக்கும் வலிகளும், வேதனைகளும் ஏராளம்.

அப்படி ஒரு சூழலில், மும்பையை சேர்ந்த ரஹத் கான் என்ற உணவு டெலிவரி ஊழியர், மழைக்கு நடுவே செய்த அர்ப்பணிப்பு பலரது பாராட்டுக்களையும் பெற்று கொடுத்துள்ளது. சமீபத்தில் மும்பையில் கனமழை காரணமாக மக்கள் பலரும் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டதுடன் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்துள்ளது.

ஆனால் இந்த கன மழைக்கு நடுவே உணவு டெலிவரி ஊழியரான ரஹத் கான், வெறும் காலில் இரண்டு உணவு ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளார். இந்த இரண்டு உணவில் ஒரு ஆர்டரை பெற்றுக் கொண்ட ஸ்வாதி மிட்டால் என்ற பெண் ஒருவர் ரஹத் கான் உணவை கொண்டு வந்தது பற்றி தனது சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நாங்கள் உணவு ஆர்டர் செய்ததும் ரஹத் கான் அதனை கொண்டு வர அவரது பைக்கும் வழியில் பிரேக் டவுன் ஆகி உள்ளது. இதனால் நடந்தே இரண்டு இடங்களில் மழையில் நனைந்து கொண்டே உணவுகளை அவர் டெலிவரி செய்துள்ளார். இது டெலிவரி ஊழியர்களை நாம் பாராட்ட வேண்டும் என்றும் இவர்களை போல ஒருவர் இருந்தது நாம் செய்த பாக்கியம் என்றும் மனம் நெகிழ்ந்து ஸ்வாதி மிட்டால் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ரஹத் கானை பலரும் பாராட்டி வரும் அதே வேளையில் மழை நேரத்தில் கூட இப்படி உணவு டெலிவரி ஊழியர்களை அலைக்கழிக்க ஏதாவது ஆர்டர் செய்ய வேண்டுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் பலரும் உணவு டெலிவரி ஊழியர்களை தரக்குறைவாக பேசி வரும் சூழலில் இப்படி ஒரு சம்பவம் நிச்சயம் அவர்களின் வாயை அடைக்கும் என எதிர்பார்க்கலாம்.